TN

TN SHORTS

செய்தி வெளியீடுகள்

வேளாண்மை, நிர்வாகம், பேரிடர் மேலாண்மை, ஊரக வளர்ச்சி

வேளாண்மை - உழவர் நலத்துறை சார்ந்த திட்டங்களின் செயல்பாடு, இடுபொருள் விநியோகம், பயிர்சாகுபடி மற்றும் பயிர் நிலை கண்காணிக்க மாவட்ட வாரியாக வேளாண்மை - உழவர் நலத்துறை உயர் அலுவலர்கள் நியமனம்

வறட்சி, வெள்ளம் போன்ற இயற்கைச் சீற்றங்களால் விவசாயிகள் பாதிக்கப்படாமல் காக்கவும், அரசின் திட்டங்கள் விவசாயிகளுக்கு தாமதமின்றிக் கிடைத்திடவும் தமிழ்நாடு அரசு தொடர் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, வேளாண்மை - உழவர் நலத்துறையின் மாநில அளவிலான 19 மூத்த அலுவலர்களை ஒன்று முதல் மூன்று மாவட்டங்களுக்கு ஒரு அலுவலர் வீதம் மாவட்டக் கண்காணிப்பு அலுவலர்களாக 17.11.2026 அன்று நியமிக்கப்பட்டு உத்தரவிடப்பட்டுள்ளது.

விரிவான சுருக்கம்

வறட்சி, வெள்ளம் போன்ற இயற்கைச் சீற்றங்களால் விவசாயிகள் பாதிக்கப்படாமல் காக்கவும், அரசின் திட்டங்கள் விவசாயிகளுக்கு தாமதமின்றிக் கிடைத்திடவும் தமிழ்நாடு அரசு தொடர் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, வேளாண்மை - உழவர் நலத்துறையின் மாநில அளவிலான 19 மூத்த அலுவலர்களை ஒன்று முதல் மூன்று மாவட்டங்களுக்கு ஒரு அலுவலர் வீதம் மாவட்டக் கண்காணிப்பு அலுவலர்களாக 17.11.2026 அன்று நியமிக்கப்பட்டு உத்தரவிடப்பட்டுள்ளது. இம்மாவட்ட கண்காணிப்பு அலுவலர்கள், கள அளவில், வேளாண்மை, தோட்டக்கலை (ம) மலைப்பயிர்கள், வேளாண் பொறியியல், வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகம், விதைச் சான்றளிப்பு (ம) உயிர்ம சான்றளிப்பு, சர்க்கரை ஆகிய துறைகளுக்கிடையே ஒருங்கிணைப்பை உறுதிசெய்து உழவர் பதிவு, மின்னணு பயிர் சாகுபடி கணக்கீடு, சம்பா பயிர்களின் தற்போதைய நிலை மற்றும் நீர் பற்றாக்குறையினால் வாடும் பயிர்களை மீட்டெடுக்கத் தேவையான நடவடிக்கைகள், பயிர் காப்பீடு, அறிவிக்கை செய்யப்பட்ட பகுதிகளில் விதைப்பு செய்ய இயலாமை, விதைப்பு பொய்த்தல் மற்றும் இடைநிலைப் பருவ நிகழ்வுகள் ஆகிய இடர் நிகழ்வுகளுக்கு மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள், ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் பங்கேற்கும் திட்டங்களின் செயல்பாடு மற்றும் முன்னேற்றம், மாவட்டத்தில் மேற்கொள்ளப்படும் வேளாண் செயல்பாடுகள், பயிர் சாகுபடி முன்னேற்றம் மற்றும் நிலை, திட்டங்கள் செயல்பாடு மற்றும் பயனாளிகள் தேர்வில் வெளிப்படைத்தன்மை, வறட்சி மற்றும் வெள்ளக் கண்காணிப்பு, உரம், விதை, பயிர் பாதுகாப்பு மருந்துகள் போன்ற இடுபொருட்களின் இருப்பு மற்றும் விநியோகம், கரும்பு பதிவு, அரவை நடவடிக்கைகள், கரும்பு விவசாயிகளுக்கு வழங்கப்படும் ஊக்கத்தொகை, நீர்வடிப்பகுதி மேம்பாட்டுத் திட்டங்கள், உழவர் சந்தை, ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள், குளிர்பதனக் கிடங்குகள் குறித்த செயல்பாடுகளைத் தொடர்ந்து கண்காணித்து, உடனுக்குடன் அரசுக்குத் தெரிவிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், இது குறித்து 23.11.2026 அன்று வேளாண்மை உற்பத்தி ஆணையர் மற்றும் அரசு செயலாளர் அவர்களின் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், மாவட்ட கண்காணிப்பு அலுவலர்கள் உழவர் பதிவேடு, மின்னணு பயிர் சாகுபடி கணக்கீடு, பயிர் காப்பீடு பதிவு, சம்பா நெற்பயிர் சாகுபடி மற்றும் அதன் நிலை, நீர் பற்றாக்குறையினால் வாடும் பயிர்களை மீட்டெடுக்கத் தேவையான நடவடிக்கைகள், உரம் மற்றும் விதை உள்ளிட்ட இடுபொருட்கள் போதிய அளவில் தரத்துடன் கிடைப்பதை உறுதி செய்தல், பல்வேறு ஒன்றிய மற்றும் மாநில திட்டப் பணிகளை விரைவுபடுத்துதல், அனைத்துத் திட்டங்களின் முன்னேற்றங்களை கண்காணித்து திட்டப்பயன்கள் வெளிப்படையான முறையில், தகுதியான விவசாயிகளுக்கு சென்றடைவதை உறுதி செய்திடவும் அறிவுறுத்தப்பட்டது. ஏற்கனவே, தலைமைச் செயலாளர் அவர்களின் உத்தரவின்படி, வேளாண்மை, தோட்டக்கலை (ம) மலைப்பயிர்கள், வேளாண் வணிகம் மற்றும் வேளாண் விற்பனைத்துறை இயக்குநர்கள் வாரம் இரு நாட்கள் மாவட்டங்களுக்கு சென்று கள ஆய்வு மேற்கொள்வதுடன் பயிர் பாதுகாப்பு குறித்து தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் மற்றும் வேளாண் அறிவியல் நிலையங்கள் சார்ந்த விஞ்ஞானிகள் மற்றும் மாவட்ட அதிகாரிகள் கொண்ட குழு நீர் பற்றாக்குறையால் வாடியுள்ள பயிர்களை பாதுகாத்திட தேவையான பரிந்துரைகளை வழங்கி செயல்படுத்துவதை கண்காணித்துவரும் நிலையில், தற்போது நியமிக்கப்பட்டுள்ள மாவட்ட கண்காணிப்பு அலுவலர்களும் விவசாயிகளை நேரடியாக சந்தித்து, பயிர் சாகுபடியில் உள்ள இடர்ப்பாடுகளுக்குத் தீர்வு காண அறிவுறுத்தப்பட்டுள்ளனர். எப்போதும், விவசாயிகளின் நலனில் அக்கறை கொண்டுள்ள இவ்வரசு, எவ்வித இடர்ப்பாடுகளாலும் விவசாயிகள் பாதிப்படையாமல் பாதுகாக்கும் நோக்கத்துடன், அனைத்து மாவட்டங்களுக்கும் கண்காணிப்பு அலுவலர்களை நியமித்து நேரடியாக கள ஆய்வு மேற்கொண்டு பல்வேறு விவசாயிகள் நலன் சார்ந்த திட்டங்கள் வெளிப்படைத்தன்மையுடன் விவசாயிகளை சென்றடையவும் எல்நினோ நிகழ்வு மற்றும் சீரற்ற வடகிழக்குப் பருவ மழையால் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையிலிருந்து பயிர்களை பாதுகாக்கவும் தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது என தெரிவிக்கப்படுகிறது.

முக்கிய அறிவிப்புகள்

  • 1
    வேளாண்மை - உழவர் நலத்துறையின் மாநில அளவிலான 19 மூத்த அலுவலர்கள் ஒன்று முதல் மூன்று மாவட்டங்களுக்கு ஒரு அலுவலர் வீதம் மாவட்டக் கண்காணிப்பு அலுவலர்களாக நியமனம்.

Archive navigation

தொடர்புடைய அறிவிப்புகள் & செய்திக் குறிப்புகள்