TN

TN SHORTS

செய்தி வெளியீடுகள்

செய்தி வெளியீடு

வேளாண்மை உழவர்நலத்துறை நிதிநிலை அறிக்கை, மானியக் கோரிக்கை மற்றும் நலத்திட்டங்கள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது

மாண்புமிகு வேளாண்மை உழவர்நலத்துறை அமைச்சர் திரு.ர.வினோத் அவர்கள் தலைமையில், 2026-2027ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை, மானியக் கோரிக்கை தொடர்பான அறிவிப்புகள் மற்றும் பல்வேறு வேளாண்மை சார்ந்த நலத்திட்டங்கள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் கீழ் செயல்படும் பல்வேறு துறைகளின் செயல்பாடுகள் மற்றும் திட்டங்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

விரிவான சுருக்கம்

மாண்புமிகு வேளாண்மை உழவர்நலத்துறை அமைச்சர் திரு.ர.வினோத் அவர்கள் தலைமையில், வேளாண்மை - உழவர்நலத்துறையின் நிதிநிலை அறிக்கை, மானியக் கோரிக்கை தொடர்பாக 2026-2027ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட அறிவிப்புகள் மற்றும் துறையின் பல்வேறு வேளாண்மை சார்ந்த நலதிட்டங்கள் குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவுரையின்படி, அமைச்சர் திரு. ர. வினோத் அவர்கள் இன்று 19.11.2026 நடப்பு 2026-27ஆம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கை தொடர்பான செயல்பாடுகள் குறித்து, வேளாண்மை உழவர் நலத்துறையின் கீழ் செயல்படும் வேளாண்மைத் துறை, தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை, வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறை, வேளாண்மைப் பொறியியல் துறை, சர்க்கரைத் துறை, விதைச்சான்று மற்றும் உயிர்மச் சான்றளிப்புத் துறை, தமிழ்நாடு நீர்வடிப்பகுதி மேம்பாட்டு முகமை ஆகிய துறைகள் மற்றும் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக செயல்பாடுகள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டார்கள். இவ்வாய்வில், வேளாண்மை உழவர் நலத்துறையின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் ஒன்றிய, மாநில அரசுத் திட்டங்கள் மற்றும் அதற்கு உண்டான நிதி ஒதுக்கீட்டு விவரங்கள், மாநில அரசின் சிறப்பு திட்ட செயல்பாடுகள், சாகுபடிப் பரப்பை உயர்த்தத் தேவையான வழிமுறைகள், சீரான இடுபொருட்கள் விநியோகம், இடுபொருட்களின் தரம் உறுதி செய்தல், விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றத் தேவையான வழிமுறைகள், வேளாண்மைத் துறை சார்ந்த உட்கட்டமைப்பு விவரங்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்கள். ஆய்வின்போது, இந்நிதியாண்டில், விவசாயிகள் மற்றும் விவசாய தொழிலாளர்களின் வருமானம் மற்றும் அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் விதமாக வேளாண் நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்துவதற்கான வழிவகைகளை ஆராய்ந்து அவற்றை திறம்பட செய்து முடித்திடத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு அறிவுரைகளை வழங்கினார்கள். மேலும், வேளாண்மை உழவர் நலத்துறையின்கீழ் செயல்படுத்தப்படும் விவசாயிகள் நலன் சார்ந்த திட்டங்களை விவசாயிகள் அறிந்து பயனடையும் விதமாக விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றும் திட்டப்பயனாளிகளைத் தேர்வு செய்வதில் வெளிப்படைத்தன்மையைக் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் மாண்புமிகு வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் அவர்கள் அறிவுறுத்தினார்.

முக்கிய அறிவிப்புகள்

  • 1
    விவசாயிகள் மற்றும் விவசாய தொழிலாளர்களின் வருமானம் மற்றும் அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் விதமாக வேளாண் நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்துவதற்கான வழிவகைகளை ஆராய்ந்து அவற்றை திறம்பட செய்து முடித்திடத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு அறிவுரைகள் வழங்கப்பட்டன.
  • 2
    வேளாண்மை உழவர் நலத்துறையின்கீழ் செயல்படுத்தப்படும் விவசாயிகள் நலன் சார்ந்த திட்டங்களை விவசாயிகள் அறிந்து பயனடையும் விதமாக விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
  • 3
    திட்டப்பயனாளிகளைத் தேர்வு செய்வதில் வெளிப்படைத்தன்மையைக் கடைப்பிடிக்க வேண்டும்.

Archive navigation

தொடர்புடைய அறிவிப்புகள் & செய்திக் குறிப்புகள்