TN

TN SHORTS

செய்தி வெளியீடுகள்

பணியாளர் நலன்

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகப் பணியாளர்களுக்கு 2025-2026-ஆம் ஆண்டுக்கான மிகை ஊதியம் (போனஸ்) மற்றும் கருணைத் தொகை ரூ.167.12 கோடி, 1,06,001 பணியாளர்களுக்கு வழங்கப்படுகிறது

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்படி, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தைச் சார்ந்த 1,06,001 பணியாளர்களுக்கு, 2025-2026 ஆம் ஆண்டிற்கான மிகை ஊதியம் (போனஸ்) மற்றும் கருணைத் தொகையாக ரூ.167.12 கோடி இன்று (02.11.2026) வழங்கப்பட்டுள்ளது என போக்குவரத்துத் துறை அமைச்சர் திரு ஆ.விஜய் தமிழன் பார்த்திபன் தெரிவித்துள்ளார்.

விரிவான சுருக்கம்

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் பொதுமக்களின் போக்குவரத்துத் தேவையை பெருமளவு பூர்த்தி செய்வதில் முக்கிய பங்காற்றி வருகின்றன. எட்டு அரசு போக்குவரத்து கழகங்களின் 21,333 பேருந்துகள் 10,172–க்கும் மேற்பட்ட வழித்தடங்கள் மூலம் குக்கிராமம் முதல் மாநகரங்கள் உட்பட மக்கள் குடியிருக்கும் அனைத்துப் பகுதிகளுக்கும் தங்குதடையின்றி போக்குவரத்து சேவையினை தினசரி 2.18 கோடி மக்கள் பயன்பெறும்வகையில் வழங்கி வருகின்றது. இதில் 72% பயணிகள்கட்டணமில்லா அல்லது சலுகை கட்டணத்தில் பயணிக்கின்றனர். தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களின் பங்களிப்பு இன்றியமையததாகும். போக்குவரத்துக் கழகங்களின் பணியாளர்களை ஊக்குவித்திடும் வகையில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்படி தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தைச் சார்ந்த 1,06,001 பணியாளர்களுக்கு, 2025-2026 ஆம் ஆண்டிற்கான மிகை ஊதியம் (போனஸ்) மற்றும் கருணைத் தொகையாக ரூ.167.12 கோடி அவர்களின் வங்கிக் கணக்கில் இன்று (02.11.2026) வழங்கப்பட்டுள்ளது.

முக்கிய அறிவிப்புகள்

  • 1
    தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தைச் சார்ந்த 1,06,001 பணியாளர்களுக்கு 2025-2026 ஆம் ஆண்டிற்கான மிகை ஊதியம் (போனஸ்) மற்றும் கருணைத் தொகையாக ரூ.167.12 கோடி வழங்கப்பட்டுள்ளது.
  • 2
    மிகை ஊதியம் மற்றும் கருணைத் தொகை இன்று (02.11.2026) பணியாளர்களின் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது.
  • 3
    இந்த நிதி ஒதுக்கீடு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்படி செய்யப்பட்டுள்ளது.

Archive navigation

தொடர்புடைய அறிவிப்புகள் & செய்திக் குறிப்புகள்