TN

TN SHORTS

செய்தி வெளியீடுகள்

வேளாண்மைவிவசாயிகள் நலன்அரசு திட்டம்

கரும்பு விவசாயிகளுக்குக் கரும்பு சிறப்பு ஊக்கத்தொகை டன் ஒன்றுக்கு ரூ.709.50-ஐ விவசாயிகளின் வங்கிக் கணக்கிற்கு விடுவிப்பதை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் விவசாயிகளுக்கு ஆணைகளை வழங்கித் தொடங்கி வைத்தார்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் இன்று (4.11.2026) தலைமைச் செயலகத்தில், கரும்பு விவசாயிகளின் நலன் காத்திடும் வகையில், சட்டமன்றப் பேரவை விதி எண் 110-ன் கீழ் அறிவித்தபடி, கரும்பு சிறப்பு ஊக்கத்தொகை டன் ஒன்றுக்கு ரூ.709.50-ஐ விவசாயிகளின் வங்கிக் கணக்கிற்கு விடுவிப்பதைத் தொடங்கி வைக்கும் விதமாக, 3 கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகைக்கான ஆணைகளை வழங்கினார்.

விரிவான சுருக்கம்

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமையிலான அரசு பொறுப்பேற்றதில் இருந்து, விவசாயிகளின் நலனைப் பாதுகாத்து, அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்திட பல்வேறு ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், கரும்பு விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காகவும், கரும்பு உற்பத்தியை அதிகரிக்கவும், சர்க்கரை ஆலைகளுக்குப் பதிவு செய்து 2025-26 அரவைப் பருவத்திற்குக் கரும்பு வழங்கிய விவசாயிகளுக்குக் கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.709.50 சிறப்பு ஊக்கத்தொகையாக வழங்கப்படும் என மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 10.8.2026 அன்று சட்டமன்றப் பேரவை விதி எண் 110-ன் கீழ் அறிவித்ததைத் தொடர்ந்து, அதனைத் தொடங்கி வைத்திடும் விதமாக இன்று 3 கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகைக்கான ஆணைகளை வழங்கினார். இத்திட்டத்தின் மூலம் தமிழ்நாடு முழுவதும் சுமார் 85,000 கரும்பு விவசாயிகள் பயன்பெறுவர். இதற்காக, நடப்பு ஆண்டில் 603 கோடியே 33 இலட்சம் ரூபாய் அரசுக்குக் கூடுதல் செலவினம் ஏற்படும்.

முக்கிய அறிவிப்புகள்

  • 1
    கரும்பு விவசாயிகளின் வங்கிக் கணக்கிற்கு டன் ஒன்றுக்கு ரூ.709.50 சிறப்பு ஊக்கத்தொகை விடுவிப்பு.
  • 2
    இத்திட்டத்தின் மூலம் தமிழ்நாடு முழுவதும் சுமார் 85,000 கரும்பு விவசாயிகள் பயன்பெறுவர்.
  • 3
    நடப்பு ஆண்டில் 603 கோடியே 33 இலட்சம் ரூபாய் அரசுக்குக் கூடுதல் செலவினம் ஏற்படும்.
  • 4
    2025-26 அரவைப் பருவத்திற்குக் கரும்பு வழங்கிய விவசாயிகளுக்குக் கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.709.50 சிறப்பு ஊக்கத்தொகை வழங்கப்படும்.

Archive navigation

Newer
மாண்புமிகு இந்தியப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களுக்கு, மாண்பமை இந்திய உச்சநீதிமன்றத்தின் கிளையைச் சென்னையில் அமைத்திட தக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டி, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் எழுதியுள்ள கடிதம்.
Older
தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் சார்பில் ரூ.1,003.97 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள 643 அடுக்குமாடிக் குடியிருப்புகள் மற்றும் வணிக வளாகங்கள், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் ரூ.17.56 கோடி செலவில் கொளந்தாகவுண்டனூர் திட்டப்பகுதியில் கட்டப்பட்டுள்ள 125 அடுக்குமாடிக் குடியிருப்புகள் ஆகியவற்றை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் திறந்து வைத்தார்.

தொடர்புடைய அறிவிப்புகள் & செய்திக் குறிப்புகள்