#Budget
தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்ட Budget குறிச்சொல் கொண்ட அனைத்து செய்திகள் மற்றும் அறிவிப்புகளை இங்கே காணுங்கள்.
2026-27ஆம் ஆண்டிற்கான நிதிநிலை மற்றும் வேளாண்மை நிதிநிலை அறிக்கைகளைச் சமர்ப்பித்த அமைச்சர்கள் திரு. நெ. மரிய வில்சன் மற்றும் திரு. ர. வினோத் ஆகியோரைப் பாராட்டி முதலமைச்சர் திரு.ச. ஜோசப் விஜய் அவர்களின் சமூக வலைதளப் பதிவு
தமிழ்நாட்டின் வளர்ச்சியை இலக்காகவும், மக்கள் நலனை மையமாகவும் கொண்டு, ஆட்சிப் பொறுப்பேற்ற மூன்றே மாதங்களில் 2026-27ஆம் ஆண்டிற்கான திருத்திய நிதிநிலை அறிக்கை மற்றும் வேளாண்மை நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்த மாண்புமிகு நிதி, திட்டம் மற்றும் வளர்ச்சித்துறை அமைச்சர் திரு. நெ. மரிய வில்சன் மற்றும் மாண்புமிகு வேளாண்மை - உழவர் நலத்துறை அமைச்சர் திரு. ர. வினோத் ஆகியோருக்கு மாண்புமிகு முதலமைச்சர் திரு.ச. ஜோசப் விஜய் அவர்கள் மனமார்ந்த வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துள்ளார்.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான மேம்பாட்டுச் செயல்திட்ட மாநில மன்றக் கூட்டம் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினரின் மேம்பாட்டிற்காக ஒதுக்கப்படும் நிதியானது முழுமையாகச் சென்றடைவதை உறுதிசெய்ய அமைக்கப்பட்ட மாநில மன்றத்தின் முதல் கூட்டம் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் தலைமையில் இன்று (04.08.2026) நடைபெற்றது. இக்கூட்டத்தில், 2026-27ஆம் நிதியாண்டிற்கான மேம்பாட்டுச் செயல்திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டதுடன், நிதியானது முழுமையாகப் பயன்படுத்தப்பட வேண்டும் எனவும், திட்டத்தின் செயல்பாடுகளை முழுமையாகக் கண்காணிக்க வேண்டும் எனவும் முதலமைச்சர் அறிவுறுத்தினார்.
நீர்வளத்துறையில் நடைபெறும் பணிகள், 2026-2027 ஆம் ஆண்டிற்கான கொள்கை விளக்க குறிப்பு மற்றும் சட்டப்பேரவை மானிய கோரிக்கை அறிவிப்புகள் குறித்த ஆய்வு கூட்டமானது நடைபெற்றது.
மாண்புமிகு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்களின் உத்தரவுப்படி, மாண்புமிகு ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் திரு.என்.ஆனந்த் அவர்கள் தலைமையில் இன்று (29.07.2026) சென்னை, கலைவாணர் அரங்கத்தில் நீர்வளத்துறையில் நடைபெறும் பணிகள், 2026-2027 ஆம் ஆண்டிற்கான கொள்கை விளக்க குறிப்பு மற்றும் சட்டப்பேரவை மானிய கோரிக்கை அறிவிப்புகள் குறித்த ஆய்வு கூட்டம் நடைபெற்றது.
2026-27 வேளாண்மை தனி நிதிநிலை அறிக்கைக்கான மாநில அளவிலான கருத்துக் கேட்புக் கூட்டம் சென்னையில் நடைபெற்றது
2026-27 வேளாண்மை தனி நிதிநிலை அறிக்கை தயாரிப்பு குறித்து விவசாயிகள் மற்றும் பங்குதாரர்களிடம் கருத்துக்களைப் பெறுவதற்காக, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் திரு.ர.வினோத் தலைமையில் சென்னையில் மாநில அளவிலான கருத்துக் கேட்புக் கூட்டம் நடைபெற்றது.