TN

TN SHORTS

செய்தி வெளியீடுகள்

குறிச்சொல் செய்திகள்

#Government Scheme

தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்ட Government Scheme குறிச்சொல் கொண்ட அனைத்து செய்திகள் மற்றும் அறிவிப்புகளை இங்கே காணுங்கள்.

23 செப்., 2026PR #727

பொங்கல் 2027 மற்றும் தீபாவளி 2026 வேட்டி, சேலை வழங்கும் திட்டங்கள் குறித்த ஆய்வுக் கூட்டம்

மாண்புமிகு கைத்தறி, துணிநூல் மற்றும் கதர்த் துறை அமைச்சர் திரு.ம.விஜய் பாலாஜி அவர்கள் தலைமையில், பொங்கல் 2027 மற்றும் தீபாவளி 2026 பண்டிகைக்கு வேட்டி, சேலை வழங்கும் திட்டங்களின் செயலாக்கம் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

22 செப்., 2026PR #713

மாண்புமிகு முதலமைச்சர் பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்ட விரிவாக்கத்தை 6 முதல் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்காக தொடங்கி வைத்தார்

மாண்புமிகு முதலமைச்சர் பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டத்தை அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 6 முதல் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் விரிவுபடுத்தும் திட்டத்தை சென்னையில் தொடங்கி வைத்தார்.

21 செப்., 2026PR #708

"வெற்றிப் பயணம்" திட்டத்தின் முன்னேற்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் "வெற்றிப் பயணம்" திட்டத்தின் முன்னேற்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டத்தை நடத்தினார். இத்திட்டம் அக்டோபர் 2, 2026 அன்று தொடங்கப்பட்டு, தமிழ்நாட்டில் மகளிருக்கான கட்டணமில்லா பேருந்து பயணத்தை விரிவுபடுத்தும்.

18 செப்., 2026PR #694

பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்ட விரிவாக்கம் தொடர்பான ஆய்வுக்கூட்டம்.

அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியருக்கு பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டத்தினை விரிவாக்கம் செய்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் 22.9.2026 அன்று சென்னையில் தொடங்கி வைக்கிறார். இன்று (18.9.2026) தலைமைச் செயலகத்தில், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியருக்கு பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்ட விரிவாக்கத் தொடக்கம் மற்றும் செயல்படுத்துதல் தொடர்பான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

10 செப்., 2026PR #637

பேரறிஞர் அண்ணா அவர்களின் 117-வது பிறந்தநாளை முன்னிட்டு செப்டம்பர் 15 முதல் ஜனவரி 31 வரை 139 நாட்களுக்கு பருத்தி மற்றும் பட்டு நெசவாளர் கூட்டுறவு சங்கங்கள் மற்றும் கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தில் சிறப்புத் தள்ளுபடி

பேரறிஞர் அண்ணா அவர்களின் 117-வது பிறந்தநாளை முன்னிட்டு, செப்டம்பர் 15, 2026 முதல் ஜனவரி 31, 2027 வரை 139 நாட்களுக்கு பருத்தி மற்றும் பட்டு கைத்தறிப் பொருட்களுக்கு நெசவாளர் கூட்டுறவு சங்கங்கள் மற்றும் கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தில் மொத்தம் 30% சிறப்புத் தள்ளுபடி வழங்கப்படும்.

24 ஆக., 2026

“வெற்றித் தமிழகம்” தொலைநோக்குத் திட்டத்தின் ஓர் அங்கமாக, 'வெற்றிப் பயணம்' திட்டம் குறித்து தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் விதி எண் 110-ன் கீழ் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச. ஜோசப் விஜய் அவர்கள் வெளியிட்ட அறிவிப்பு.

தமிழ்நாடு அரசு மகளிருக்கான கட்டணமில்லாப் பயணத் திட்டத்தை 'வெற்றிப் பயணம்' எனப் பெயரிட்டு விரிவுபடுத்தியுள்ளது. அக்டோபர் 2 ஆம் தேதி முதல் செயல்படுத்தப்படும் இத்திட்டத்தின் கீழ், பெண்கள் மற்றும் திருநர்கள் மாநகரம், நகர்ப்புறங்களில் சாதாரண, எக்ஸ்பிரஸ், எல்.எஸ்.எஸ், டீலக்ஸ் அரசுப் பேருந்துகளிலும், மாவட்டங்களுக்கிடையேயான மற்றும் மலைப்பகுதிகளுக்கான சாதாரண புறநகர்ப் பேருந்துகளிலும் வருமான உச்சவரம்பு அல்லது பயண எண்ணிக்கைக் கட்டுப்பாடுகள் இன்றி இலவசமாகப் பயணிக்கலாம்.

9 ஜூலை, 2026PR #367

5 நாட்கள் - தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்டம் 'திருமண புகைப்படம் மற்றும் வீடியோ எடிட்டிங் பயிற்சி'

தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், சென்னையில், 5 நாட்கள் தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்டம் திருமண புகைப்படம் மற்றும் வீடியோ எடிட்டிங் பயிற்சி 20.07.2026 முதல் 24.07.2026 வரை நடைபெற உள்ளது. ஆர்வமுள்ள 18 வயதுக்கு மேற்பட்ட, 10வது வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். அரசு சான்றிதழ் வழங்கப்படும்.

8 ஜூலை, 2026PR #358

அமைச்சர் ர. வினோத் 'கலந்துரையாடல் மூலம் விரிவாக்கம்' திட்டத்தைத் தொடங்கி வைத்தார்

மாண்புமிகு வேளாண்மை - உழவர் நலத்துறை அமைச்சர் திரு. ர. வினோத் அவர்கள் "கலந்துரையாடல் மூலம் விரிவாக்கம்" என்ற திட்டத்தைத் தொடங்கி வைத்தார். இத்திட்டத்தின்கீழ் மாநில அளவிலான நிபுணர் குழு (SLEC) காணொலி வாயிலாக விவசாயிகளின் கேள்விகளுக்கு பதிலளித்து, அவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு அளிக்கும்.

29 ஜூன், 2026PR #307

3 நாட்கள் – தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்டம்: பேக்கரி பொருட்கள் தயாரித்தல் பயிற்சி

தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், சென்னையில், 3 நாட்கள் பேக்கரி பொருட்கள் தயாரித்தல் பயிற்சி குறித்த தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்டத்தை 2026 ஜூலை 6 முதல் ஜூலை 8 வரை நடத்த உள்ளது.

25 ஜூன், 2026PR #295

பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் நடப்பு 2026 குறுவை பருவ நெற்பயிர் மற்றும் இதர பயிர்களை பொது சேவை மையங்கள், தொடக்க வேளாண் கடன் கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் ஜுலை 31ம் தேதிக்குள் விவசாயிகள் காப்பீடு செய்து கொள்ள மாண்புமிகு வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் திரு.ர. வினோத் அவர்கள் வேண்டுகோள்.

மாண்புமிகு வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் திரு. ர. வினோத் அவர்கள், இயற்கை சீற்றங்கள் மற்றும் எல் நினோ தாக்கத்தால் ஏற்படும் இழப்புகளில் இருந்து பாதுகாக்க, 2026 குறுவை பருவ நெற்பயிர் மற்றும் இதர பயிர்களுக்கு ஜூலை 31, 2026-க்குள் பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் காப்பீடு செய்யுமாறு விவசாயிகளை வலியுறுத்தியுள்ளார்.

23 ஜூன், 2026PR #267

ஆதிதிராவிடர் நல இயக்குநரகம்: சமூக நல்லிணக்க ஊராட்சி விருது 2026-2027

2026-27 ஆம் ஆண்டிற்கான சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆர்வமுள்ள ஊராட்சிகள் தங்களது விண்ணப்பங்களை ஆவணங்களுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 31.07.2026க்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

16 ஜூன், 2026PR #234

கூட்டுறவு வங்கிகளின் மூலம் ரூ.75,000/- வரை பயிர்க்கடன் பெற்ற குறு, சிறு மற்றும் இதர பெரு விவசாயிகளுக்கு 100 சதவீதம் முழுமையாக பயிர்க்கடன் தள்ளுபடி செய்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச. ஜோசப் விஜய் அவர்கள் அறிவிப்பு

மாண்புமிகு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் தலைமையிலான தமிழ்நாடு அரசு, கூட்டுறவு வங்கிகள் மூலம் ரூ.75,000/- வரை பயிர்க்கடன் பெற்ற குறு, சிறு மற்றும் இதர பெரு விவசாயிகளுக்கு 100 சதவீதம் பயிர்க்கடன் தள்ளுபடி செய்வதாக அறிவித்துள்ளது. இத்திட்டத்தின் கீழ் 14.43 லட்சத்திற்கும் அதிகமான விவசாயிகள் பயனடைவார்கள், மொத்த செலவு சுமார் ரூ.5,932.23 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.