#Silver Medal
தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்ட Silver Medal குறிச்சொல் கொண்ட அனைத்து செய்திகள் மற்றும் அறிவிப்புகளை இங்கே காணுங்கள்.
மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் பாரா ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் வெள்ளிப் பதக்கம் வென்ற வீரர் சிவராஜன் சோலைமலை அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து ரூ.50 இலட்சம் ஊக்கத்தொகை அறிவிப்பு
ஜப்பானில் நடைபெற்ற 5-வது பாரா ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பேட்மிண்டன் ஆண்கள் இரட்டையர் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரர் சிவராஜன் சோலைமலை அவர்களுக்கு மாண்புமிகு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் வாழ்த்து தெரிவித்து, தமிழ்நாடு அரசு சார்பில் ரூ.50 இலட்சம் ஊக்கத்தொகை வழங்கப்படும் என அறிவித்தார்.
ஜப்பானில் நடைபெற்றுவரும் 5-வது பாரா ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பெண்களுக்கான வலுதூக்குதல் போட்டியில், 67 கிலோ எடைப் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற தமிழக வீராங்கனை கஸ்தூரி ராஜாமணி அவர்களுக்கு வாழ்த்துத் தெரிவித்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவு
ஜப்பானில் நடைபெற்றுவரும் 5-வது பாரா ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பெண்களுக்கான வலுதூக்குதல் போட்டியில், 67 கிலோ எடைப் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்று தமிழ்நாட்டிற்கும், இந்தியாவிற்கும் பெருமை சேர்த்துள்ள வீராங்கனை கஸ்தூரி ராஜாமணி அவர்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுகளையும், நல்வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது சாதனையைப் பாராட்டும் வகையில், தமிழ்நாடு அரசு சார்பில் ரூ.50 இலட்சம் உயரிய ஊக்கத்தொகை வழங்கப்படும்.
ஆசிய விளையாட்டுப் போட்டியில், ஸ்குவாஷ் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த ஸ்குவாஷ் வீரர் அபய் சிங் அவர்களுக்கு வாழ்த்துத் தெரிவித்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச. ஜோசப் விஜய் அவர்கள் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவு
மாண்புமிகு முதலமைச்சர் திரு.ச. ஜோசப் விஜய் அவர்கள் ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற ஸ்குவாஷ் வீரர் அபய் சிங் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து, தமிழ்நாடு அரசு சார்பில் ரூ.50 இலட்சம் ஊக்கத்தொகை அறிவித்துள்ளார்.
ஆசிய விளையாட்டுப் போட்டியில், தடகளம் 4x400 மீட்டர் கலப்பு தொடர் ஓட்டப் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற இந்திய அணிக்கும், அவ்வணியில் இடம்பெற்றுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த தடகள வீரர்கள் வித்யா ராம்ராஜ் மற்றும் விஷால் டி.கே. ஆகியோருக்கும் வாழ்த்துத் தெரிவித்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச. ஜோசப் விஜய் அவர்கள் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவு
ஆசிய விளையாட்டுப் போட்டியில் 4x400 மீட்டர் கலப்பு தொடர் ஓட்டத்தில் வெள்ளிப் பதக்கம் வென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த தடகள வீரர்கள் வித்யா ராம்ராஜ் மற்றும் விஷால் டி.கே. ஆகியோருக்கு முதலமைச்சர் வாழ்த்து தெரிவித்து, தலா ரூ.50 இலட்சம் ஊக்கத்தொகை அறிவித்தார்.
ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற இளவேனில் வாலறிவன் அவர்களுக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் வாழ்த்து
ஆசிய விளையாட்டுப் போட்டியில் 10 மீட்டர் ஏர் ரைபிள் துப்பாக்கி சுடும் போட்டியில் இந்திய மகளிர் அணியில் மற்றும் தனிநபர் பிரிவிலும் வெள்ளிப் பதக்கம் வென்ற வீராங்கனை இளவேனில் வாலறிவன் அவர்களுக்கு மாண்புமிகு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் நெஞ்சார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் பளுதூக்கும் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற திரு. ராஜா முத்துப்பாண்டி அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவு.
மாண்புமிகு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள், ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடைபெற்ற 23-வது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில், ஆண்களுக்கான 65 கிலோ பளுதூக்கும் எடைப் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற திரு. ராஜா முத்துப்பாண்டி அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து, தமிழ்நாடு அரசின் சார்பில் 30 இலட்சம் ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படும் என அறிவித்தார்.