#Sports Incentive
தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்ட Sports Incentive குறிச்சொல் கொண்ட அனைத்து செய்திகள் மற்றும் அறிவிப்புகளை இங்கே காணுங்கள்.
பாரா ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் வெண்கலம் வென்ற வீராங்கனை மனிஷா ராமதாஸ்க்கு முதலமைச்சர் வாழ்த்து மற்றும் ரூ. 30 இலட்சம் ஊக்கத்தொகை அறிவிப்பு
ஜப்பானில் நடைபெற்றுவரும் 5-வது பாரா ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பேட்மிண்டன் கலப்பு இரட்டையர் SL3-SU5 பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய அணிக்கும், அதில் இடம்பெற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த வீராங்கனை மனிஷா ராமதாஸ் அவர்களுக்கும் மாண்புமிகு முதலமைச்சர் திரு. ச.ஜோசப் விஜய் அவர்கள் நெஞ்சார்ந்த பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்து, வீராங்கனை மனிஷா ராமதாஸ்க்கு ரூ. 30 இலட்சம் உயரிய ஊக்கத்தொகை வழங்கப்படும் என அறிவித்தார்.
ஆசிய விளையாட்டுப் போட்டிகளில், ஆடவர் கிரிக்கெட் பிரிவில் தங்கப் பதக்கம் வென்ற இந்திய ஆடவர் அணிக்கும், அவ்வணியில் இடம்பெற்றுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரர் வாஷிங்டன் சுந்தர் அவர்களுக்கும் வாழ்த்துத் தெரிவித்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச. ஜோசப் விஜய் அவர்கள் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவு
ஜப்பானில் நடைபெற்றுவரும் 20-வது ஆசிய விளையாட்டுப் போட்டிகளில், ஆடவர் கிரிக்கெட் பிரிவில் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ள இந்திய ஆடவர் அணிக்கும், அவ்வணியில் இடம்பெற்றுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் வாஷிங்டன் சுந்தர் அவர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். கிரிக்கெட் வீரர் வாஷிங்டன் சுந்தர் அவர்களின் சாதனையைப் பாராட்டி, தமிழ்நாடு அரசின் சார்பில் உயரிய ஊக்கத்தொகையாக .75 இலட்சம் வழங்கப்படும்.
ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் 4x400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் வெண்கலம் வென்ற இந்திய அணிக்கும், தமிழ்நாட்டைச் சேர்ந்த தடகள வீரர்கள் விஷால் மற்றும் ராஜேஷ் ஆகியோருக்கும் மாண்புமிகு முதலமைச்சர் திரு.ச. ஜோசப் விஜய் வாழ்த்து
ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் 4x400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய அணிக்கும், தமிழ்நாட்டைச் சேர்ந்த தடகள வீரர்கள் விஷால் மற்றும் ராஜேஷ் ஆகியோருக்கும் முதலமைச்சர் திரு.ச. ஜோசப் விஜய் வாழ்த்து தெரிவித்ததுடன், தலா ரூ.30 இலட்சம் ஊக்கத்தொகை வழங்கப்படும் என அறிவித்தார்.
ஆசிய விளையாட்டுப் போட்டியில், தடகளம் 4x400 மீட்டர் கலப்பு தொடர் ஓட்டப் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற இந்திய அணிக்கும், அவ்வணியில் இடம்பெற்றுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த தடகள வீரர்கள் வித்யா ராம்ராஜ் மற்றும் விஷால் டி.கே. ஆகியோருக்கும் வாழ்த்துத் தெரிவித்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச. ஜோசப் விஜய் அவர்கள் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவு
ஆசிய விளையாட்டுப் போட்டியில் 4x400 மீட்டர் கலப்பு தொடர் ஓட்டத்தில் வெள்ளிப் பதக்கம் வென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த தடகள வீரர்கள் வித்யா ராம்ராஜ் மற்றும் விஷால் டி.கே. ஆகியோருக்கு முதலமைச்சர் வாழ்த்து தெரிவித்து, தலா ரூ.50 இலட்சம் ஊக்கத்தொகை அறிவித்தார்.
ஆசிய விளையாட்டுப் போட்டியில், பேட்மிண்டன் ஆடவர் குழுப் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய ஆடவர் அணிக்கும், அவ்வணியில் இடம்பெற்றுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த பேட்மிண்டன் வீரர் திரு. ஹரிஹரன் அவர்களுக்கும் வாழ்த்துத் தெரிவித்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச. ஜோசப் விஜய் அவர்கள் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவு
ஜப்பானில் நடைபெற்றுவரும் ஆசிய விளையாட்டுப் போட்டியில், பேட்மிண்டன் ஆடவர் குழுப் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ள இந்திய ஆடவர் அணிக்கும், அவ்வணியில் இடம்பெற்றுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த பேட்மிண்டன் வீரர் திரு. ஹரிஹரன் அவர்களுக்கும் எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகள் மற்றும் பாராட்டுகள். அவரது திறமையைப் பாராட்டும் வகையில், தமிழ்நாடு அரசின் சார்பில் ரூ.30 இலட்சம் உயரிய ஊக்கத்தொகை வழங்கப்படும்.
ஆசிய விளையாட்டுப் போட்டியில், மகளிர் கிரிக்கெட் பிரிவில் தங்கப் பதக்கம் வென்ற இந்திய மகளிர் அணிக்கும், தமிழ்நாட்டைச் சேர்ந்த வீராங்கனை கமலினி அவர்களுக்கும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச. ஜோசப் விஜய் அவர்கள் வாழ்த்துத் தெரிவித்து வெளியிட்ட சமூக வலைதளப் பதிவு
ஜப்பானில் நடைபெற்ற 20-வது ஆசிய விளையாட்டுப் போட்டியில் மகளிர் கிரிக்கெட்டில் தங்கப் பதக்கம் வென்ற இந்திய அணியில் இடம்பெற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த வீராங்கனை கமலினிக்கு முதலமைச்சர் திரு.ச. ஜோசப் விஜய் வாழ்த்து தெரிவித்ததுடன், அவரது சாதனைக்காக ரூ.75 இலட்சம் ஊக்கத்தொகை வழங்கப்படும் என அறிவித்தார்.