#Tamil Nadu
தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்ட Tamil Nadu குறிச்சொல் கொண்ட அனைத்து செய்திகள் மற்றும் அறிவிப்புகளை இங்கே காணுங்கள்.
முதலமைச்சர் கோப்பை - 2026 விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க ஆகஸ்ட்- 6 முதல் இணையத்தளத்தில் பதிவு செய்ய அழைப்பு
முதலமைச்சர் கோப்பை - 2026 விளையாட்டுப் போட்டிகளுக்கான ஆன்லைன் பதிவு ஆகஸ்ட் 6 முதல் ஆகஸ்ட் 31, 2026 வரை tncmtrophy.sdat.in இணையதளத்தில் நடைபெறும். போட்டிகள் செப்டம்பர் 4, 2026 முதல் மாவட்ட அளவில் தொடங்கும். இந்த ஆண்டு மொத்தம் 45 வகையான விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படும்.
2026-27ஆம் ஆண்டிற்கான நிதிநிலை மற்றும் வேளாண்மை நிதிநிலை அறிக்கைகளைச் சமர்ப்பித்த அமைச்சர்கள் திரு. நெ. மரிய வில்சன் மற்றும் திரு. ர. வினோத் ஆகியோரைப் பாராட்டி முதலமைச்சர் திரு.ச. ஜோசப் விஜய் அவர்களின் சமூக வலைதளப் பதிவு
தமிழ்நாட்டின் வளர்ச்சியை இலக்காகவும், மக்கள் நலனை மையமாகவும் கொண்டு, ஆட்சிப் பொறுப்பேற்ற மூன்றே மாதங்களில் 2026-27ஆம் ஆண்டிற்கான திருத்திய நிதிநிலை அறிக்கை மற்றும் வேளாண்மை நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்த மாண்புமிகு நிதி, திட்டம் மற்றும் வளர்ச்சித்துறை அமைச்சர் திரு. நெ. மரிய வில்சன் மற்றும் மாண்புமிகு வேளாண்மை - உழவர் நலத்துறை அமைச்சர் திரு. ர. வினோத் ஆகியோருக்கு மாண்புமிகு முதலமைச்சர் திரு.ச. ஜோசப் விஜய் அவர்கள் மனமார்ந்த வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டிலுள்ள அனைத்து நியாயவிலைக்கடைகளிலும் வருகின்ற 08.08.2026 மற்றும் 09.08.2026 ஆகிய இரண்டு தினங்கள் eKYC சிறப்பு முகாம்
தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம், 2013-இன் கீழ் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளபடி, குடும்ப அட்டைதாரர்களுக்கான eKYC பதிவினை 100% நிறைவு செய்யும் பொருட்டு, தமிழ்நாட்டிலுள்ள அனைத்து நியாயவிலைக்கடைகளிலும் 08.08.2026 மற்றும் 09.08.2026 ஆகிய இரண்டு தினங்கள் சிறப்பு eKYC முகாம்கள் நடைபெறவுள்ளன.
2026 சென்னை ஓபன் சர்வதேச மகளிர் டென்னிஸ் சாம்பியன்ஷிப் (WTA -250) போட்டி நடத்திட ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் அறிவிப்பு
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள், 2026 சென்னை ஓபன் சர்வதேச மகளிர் டென்னிஸ் சாம்பியன்ஷிப் (WTA-250) போட்டியினை நடத்த ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்று அறிவித்துள்ளார்.
மாண்புமிகு புதுச்சேரி முதலமைச்சர் அவர்களுக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் பிறந்தநாள் வாழ்த்து.
தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் புதுச்சேரி முதலமைச்சர் திரு. என். ரங்கசாமி அவர்களுக்கு தொலைபேசி வாயிலாக பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார்.
உயர்கல்வித் துறை சார்பில் ரூ.274.46 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள கல்விசார் கட்டடங்களை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் திறந்து வைத்தார்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச.ஜோசப் விஜய் அவர்கள் இன்று (4.8.2026) தலைமைச் செயலகத்தில், உயர்கல்வித் துறை சார்பில், அரசு பலவகை தொழில்நுட்பக் கல்லூரிகள், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், அரசு பொறியியல் கல்லூரிகள் மற்றும் திருவள்ளுவர் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் 274 கோடியே 46 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள வகுப்பறைக் கட்டடங்கள், ஆய்வகக் கட்டடங்கள், பணிமனைக் கட்டடங்கள், திறன்மிகு மையங்களுக்கான பணிமனைகள், நூலகங்கள், மின்னணு நூலகங்கள், செயற்கை நுண்ணறிவு மற்றும் தரவு அறிவியல் கட்டடங்கள் உள்ளிட்ட பல்வேறு கட்டடங்களைத் திறந்து வைத்தார்.
நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் ரூ.112.85 கோடி செலவிலான 4 முடிவுற்ற திட்டப் பணிகளைத் திறந்து வைத்து, ரூ.710.50 கோடி மதிப்பீட்டிலான 4 புதிய திட்டப் பணிகளுக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் அடிக்கல் நாட்டினார்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் சார்பில் ரூ.112.85 கோடி செலவில் 4 முடிவுற்ற திட்டப் பணிகளைத் திறந்து வைத்து, ரூ.710.50 கோடி மதிப்பீட்டிலான 4 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். இத்திட்டங்கள் நகர்ப்புற உள்கட்டமைப்பு, குடிநீர் விநியோகம் மற்றும் சுகாதாரம் ஆகியவற்றை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளன.
தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் ரூ.525.75 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள 4,260 அடுக்குமாடிக் குடியிருப்புகள், சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் சார்பில் பெரம்பூரில் ரூ.1.43 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள டாக்டர் அம்பேத்கர் கல்லூரி குளிரூட்டப்பட்ட பேருந்து நிறுத்தம் ஆகியவற்றை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் திறந்து வைத்தார்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச.ஜோசப் விஜய் அவர்கள் இன்று (4.8.2026) தலைமைச் செயலகத்தில், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறையின் கீழ், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் 525.75 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 4,260 புதிய அடுக்குமாடிக் குடியிருப்புகள் மற்றும் சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் சார்பில் பெரம்பூரில் 1.43 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள டாக்டர் அம்பேத்கர் கல்லூரி குளிரூட்டப்பட்ட பேருந்து நிறுத்தம் ஆகியவற்றைக் காணொலிக் காட்சி வாயிலாகத் திறந்து வைத்தார்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் ரூ.113 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள மருத்துவக் கட்டடங்களைத் திறந்து வைத்து, நவீன மருத்துவ உபகரணங்களின் பயன்பாட்டினையும் தொடங்கி வைத்தார்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் இன்று (4.8.2026) தலைமைச் செயலகத்தில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் காணொலிக் காட்சி வாயிலாக 113 கோடி ரூபாய் செலவில் அறந்தாங்கி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை, பள்ளிப்பட்டு, பொதட்டூர்பேட்டை, ஆத்தூர், மரக்காணம் மற்றும் வளவனூர் அரசு மருத்துவமனைகளில் கட்டப்பட்டுள்ள கூடுதல் கட்டடங்கள், கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள கதிரியக்க சிகிச்சை மையம், புதிதாகக் கட்டப்பட்டுள்ள 4 ஆரம்ப சுகாதார நிலையங்கள், 12 துணை சுகாதார நிலையங்கள் மற்றும் 2 வட்டார பொது சுகாதார அலகுகள் ஆகியவற்றைத் திறந்து வைத்து, நவீன மருத்துவ உபகரணங்களின் பயன்பாட்டையும் தொடங்கி வைத்தார்.
கர்நாடக அரசு தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறந்து விடாத நிலையில் மாண்பமை உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
காவிரி நீர் மேலாண்மை ஆணையம் (CWMA) மற்றும் காவிரி நீர் முறைப்படுத்தும் குழுவின் (CWRC) உத்தரவுகளின்படி கர்நாடக அரசு தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறந்து விடாத நிலையில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்களின் அறிவுறுத்தலின் படி மாண்பமை உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலை நினைவு நாளில் மாண்புமிகு முதலமைச்சர் திரு.ச. ஜோசப் விஜய் அவர்களின் சமூக வலைதளப் பதிவு
சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலை நினைவு நாளில், மாண்புமிகு முதலமைச்சர் திரு.ச. ஜோசப் விஜய் அவர்கள் அவரது வீரத்தையும் தியாகத்தையும் போற்றி அஞ்சலி செலுத்தினார்.
காமன்வெல்த் போட்டியில் பதக்கம் வென்ற பிரவீன் சித்ரவேல், செல்வ பிரபுவுக்கு முதலமைச்சர் வாழ்த்து
காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் மும்முறை தாண்டுதல் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற திரு. பிரவீன் சித்ரவேல் மற்றும் வெண்கலப் பதக்கம் வென்ற திரு. செல்வ பிரபு ஆகியோருக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் வாழ்த்து தெரிவித்து, முறையே 30 இலட்சம் மற்றும் 20 இலட்சம் ரூபாய் ஊக்கத்தொகை அறிவித்தார்.