பொதுத்துறை
முதலமைச்சர் அலுவலக அறிவிப்புகள், நெறிமுறைகள் மற்றும் முக்கிய நிர்வாக உத்தரவுகள்.
மாண்புமிகு அமைச்சர் திரு. ராஜ்மோகன் அவர்கள் சென்னை பள்ளி மாணவர்கள், தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள் 2,090 பேருக்கு ரூ.72.03 இலட்சம் கல்வி ஊக்கத்தொகையினை வழங்கினார்.
மாண்புமிகு அமைச்சர் திரு. ராஜ்மோகன், சென்னை மாநகராட்சிப் பள்ளிகளைச் சேர்ந்த 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் சிறப்பாகச் செயல்பட்ட 2,090 மாணவர்கள், தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ரூ.72.03 இலட்சம் கல்வி ஊக்கத்தொகையை வழங்கினார்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச.ஜோசப் விஜய் அவர்கள் இயக்குநர் இமயம் திரு. பாரதிராஜா அவர்களின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ள பதிவு
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச.ஜோசப் விஜய் அவர்கள், இயக்குநர் இமயம் திரு. பாரதிராஜா அவர்களின் மறைவிற்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். அவரது இறுதிப் பயணத்திற்கு அரசு மரியாதை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
5 நாட்கள் மடிக்கணினி வன்பொருள் மற்றும் சிப்-நிலை பயிற்சித் திட்டம்
தமிழ்நாடு தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் (EDII-TN) சார்பில், மடிக்கணினி வன்பொருள் மற்றும் சிப்-நிலை பயிற்சித் திட்டம் சென்னை, கிண்டியில் 2026 ஜூன் 15 முதல் 19 வரை 5 நாட்கள் நடைபெறுகிறது.
தமிழக அரசின் தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் (EDII-TN), "மின்னணு வர்த்தகம் (இ-காமர்ஸ்) குறித்த பயிற்சி"
தமிழக அரசின் தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் (EDII-TN), தொழில்முனைவோர் மற்றும் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவன (MSME) உரிமையாளர்களுக்காக ஜூன் 16 முதல் 18, 2026 வரை சென்னையில் மின்னணு வர்த்தகம் மற்றும் நேரடி வாடிக்கையாளர் விற்பனை (D2C) மாதிரிகள் குறித்த மூன்று நாள் பயிற்சியை நடத்துகிறது.
தமிழ்நாடு தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் நடத்தும் மூன்று நாள் 'இ-வணிகம்' பயிற்சித் திட்டம்
சென்னை, தமிழ்நாடு தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் (EDII-TN), ஜூன் 16, 2026 முதல் ஜூன் 18, 2026 வரை அதன் சென்னை வளாகத்தில் மூன்று நாள் 'இ-வணிகம்' பயிற்சித் திட்டத்தை ஏற்பாடு செய்துள்ளது.
அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விளையாட்டு வீரர்களுக்கு நிதி உதவியும் உபகரணங்களும் வழங்கினார்
மாண்புமிகு அமைச்சர் திரு. ஆதவ் அர்ஜுனா அவர்கள், பாரா பேட்மிண்டன் வீராங்கனை துளசிமதி முருகேசனுக்கு ரூ. 10 லட்சம் நிதி உதவியும், பாரா துப்பாக்கி சுடுதல் வீரர் மனோஜ்குமாருக்கு ரூ. 6.27 லட்சம் மதிப்பில் துப்பாக்கி சுடும் உபகரணங்களும் வழங்கினார். மேலும், ஆசிய U20 தடகள சாம்பியன்ஷிப்பில் பதக்கம் வென்ற வீரர்களுக்கு உயரிய ஊக்கத்தொகையையும், ஆசிய கடற்கரை விளையாட்டுப் போட்டியில் பங்கேற்கும் ஒரு விளையாட்டு வீரருக்கு நிதி உதவியையும் வழங்கினார்.
நார்வே செஸ் 2026 தொடரில் முதல் இந்தியராகப் பட்டத்தை வென்று வரலாற்றுச் சாதனை படைத்த கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தாவிற்கு உயரிய ஊக்கத்தொகை ரூ.50 இலட்சத்திற்கான காசோலை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச.ஜோசப் விஜய் அவர்கள் வழங்கினார்
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச.ஜோசப் விஜய் அவர்கள் இன்று (8.6.2026) தலைமைச் செயலகத்தில், நார்வே தலைநகர் ஆஸ்லோவில் நடைபெற்ற நார்வே செஸ் 2026 தொடரில் முதல் இந்தியராகப் பட்டத்தை வென்று, வரலாற்றுச் சாதனை படைத்த கிராண்ட்மாஸ்டர் ஆர். பிரக்ஞானந்தாவிற்கு, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் உயரிய ஊக்கத் தொகையான 50 இலட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கினார்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்படி, வரலாற்றில் முதல் முறையாக 300 பொறியாளர்களுக்கு ஒரே நேரத்தில் பதவி உயர்வு ஆணைகள் மாண்புமிகு எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் திரு. சி.டி.ஆர். நிர்மல் குமார் அவர்களின் வழிகாட்டுதலின்படி வெளிப்படைத்தன்மையுடன் (Transparency) வழங்கப்பட்டதால் மின்வாரிய பொறியாளர்கள் மகிழ்ச்சி
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.C.ஜோசப் விஜய் அவர்களின் உத்தரவின்படி, மாண்புமிகு எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் திரு. சி.டி.ஆர். நிர்மல் குமார் அவர்களின் வழிகாட்டுதலின்படி, 2000 முதல் 2002 ஆம் ஆண்டு உதவி பொறியாளர்களாக (மின்னியல்) பணியில் சேர்ந்தவர்களுக்கு, முதற்கட்டமாக 300 செயற்பொறியாளர் பதவி உயர்வு ஆணைகள் வழங்கப்பட்டன. வெளிப்படைத்தன்மையுடன் மேற்கொள்ளப்பட்ட இந்த வரலாற்று சிறப்புமிக்க நடவடிக்கை மின்வாரிய பொறியாளர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மங்கோலியா நாட்டில் நடைபெற்ற 21-வது ஆசிய தனிநபர் மகளிர் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற சென்னையைச் சேர்ந்த சவிதா ஸ்ரீ பாஸ்கர் அவர்களுக்கு வாழ்த்துத் தெரிவித்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவு
மங்கோலியா நாட்டில் நடைபெற்ற 21-வது ஆசிய தனிநபர் மகளிர் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற சென்னையைச் சேர்ந்த செஸ் வீராங்கனை சவிதா ஸ்ரீ பாஸ்கர் அவர்களுக்கு மாண்புமிகு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
நார்வே செஸ் 2026 தொடரில் பட்டம் வென்ற கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தா அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவு
நார்வே செஸ் 2026 தொடரில் பட்டம் வென்று வரலாற்றுச் சாதனை படைத்த கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தா அவர்களுக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
மாநில அளவிலான வேட்டை பறவைகள் கணக்கெடுப்பு
தமிழ்நாட்டில் முதல் முழுமையான மாநில அளவிலான வேட்டை பறவைகள் கணக்கெடுப்பு வெற்றிகரமாக நடைபெற்றது, அதன் அறிக்கை 2026 உலக சுற்றுச்சூழல் தினத்தில் வெளியிடப்பட்டது.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் தலைமையில் தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை ஆணையக் கூட்டம் நடைபெற்றது.
மாண்புமிகு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் தலைமையில் தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை ஆணையக் கூட்டம் நடைபெற்றது. தென்மேற்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் பேரிடர் காலங்களில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்து இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.