பொதுத்துறை
முதலமைச்சர் அலுவலக அறிவிப்புகள், நெறிமுறைகள் மற்றும் முக்கிய நிர்வாக உத்தரவுகள்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள், திரு. மல்லிகார்ஜுன் கார்கே அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்து
தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள், இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவரும், மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவருமான திரு. மல்லிகார்ஜுன் கார்கே அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் சேத்துப்பட்டு உயிரி-எரிவாயு ஆலையை பார்வையிட்டு, பெருநகர சென்னை மாநகராட்சியில் அறிவியல் பூர்வமான கழிவு மேலாண்மைக்கு உத்தரவுகள் பிறப்பித்தார்
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் சென்னை சேத்துப்பட்டில் பொது-தனியார் பங்களிப்புடன் செயல்பட்டு வரும் உயிரி-எரிவாயு ஆலையை நேரில் பார்வையிட்டார். தினமும் உருவாகும் 6,150 மெட்ரிக் டன் குப்பைகளை தரம் பிரித்து, மக்கும் குப்பைகளை எரிவாயு மற்றும் உரமாக மாற்றவும், மக்காத குப்பைகளை சாலை அமைக்கவும், சிமெண்ட் ஆலைகளுக்கு எரிபொருளாகவும் பயன்படுத்த பெருநகர சென்னை மாநகராட்சி அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். மேலும், தமிழ்நாட்டிலுள்ள அனைத்து நகர்ப்புற உள்ளாட்சிகளிலும் கழிவு மேலாண்மையை அறிவியல் பூர்வமாக காலக்கெடுவுடன் செயல்படுத்தவும் அறிவுறுத்தினார்.
உலக சதுரங்க நாளை முன்னிட்டு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவு
உலக சதுரங்க நாளை முன்னிட்டு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழ்நாடு அதிக இளம் கிராண்ட் மாஸ்டர்களை உருவாக்கியதில் சாதனை படைத்துள்ளது என்றும், இளம் தலைமுறையினருக்கு அரசு அனைத்து உதவிகளையும் வழங்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
தேசிய திரைப்பட விருதுகளை வென்றுள்ள தமிழ்த் திரையுலக கலைஞர்களுக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் வாழ்த்து
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் பல்வேறு பிரிவுகளில் 10 தேசிய திரைப்பட விருதுகளை வென்று சாதனை படைத்துள்ள தமிழ்த் திரையுலகக் கலைஞர்களுக்கு தனது பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவனத்தில் அமைந்துள்ள முன்காண் திரையரங்கில் முதன்முறையாக மன இறுக்கம் (Autism) கொண்ட 40 குழந்தைகள் மற்றும் அவர்களது பெற்றோர்களுக்கு திரைப்படம் திரையிடும் நிகழ்ச்சியினை மாண்புமிகு பள்ளிக்கல்வி, தமிழ் வளர்ச்சி, செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் திரு. ராஜ்மோகன் அவர்கள் இன்று (18.07.2026) தொடங்கி வைத்தார்கள்.
மன இறுக்கம் கொண்ட 40 குழந்தைகள் மற்றும் அவர்களது பெற்றோர்களுக்கு, பொது இடங்களுக்குச் செல்லும் வாய்ப்புகளை மேம்படுத்தும் விதமாக, தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவனத்தில் திரைப்படம் திரையிடும் நிகழ்ச்சி அமைச்சர் திரு. ராஜ்மோகன் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டது. இதில் 'Finding Nemo' எனும் உயிர்பூட்டல் படம் திரையிடப்பட்டது.
தமிழ்நாடு நாள் விழா: மாணவர்களுக்கான போட்டிகள் மற்றும் பரிசளிப்பு விழா நடைபெற்றது
ஜூலை 18, 2026 அன்று சென்னை, தரமணியில் நடைபெற்ற தமிழ்நாடு நாள் விழாவில், அமைச்சர் திரு. ராஜ்மோகன் அவர்கள் பள்ளி மாணவர்களுக்கான மாநில அளவிலான கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.
தமிழ்நாடு நாளை முன்னிட்டு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவு
தமிழரின் தொன்மை, வரலாறு, பண்பாடு, மொழியுணர்வைப் போற்றும் வகையில் நமது மாநிலத்திற்கு 'தமிழ்நாடு' எனப் பெயர் சூட்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்ட இந்நாளில், தமிழ் மக்கள் அனைவருக்கும் மனமார்ந்த 'தமிழ்நாடு நாள்' நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழ் நாடு அரசின் யு.பி.எஸ்.சி முதல்நிலைத் தேர்வுக்கான ஊக்கத்தொகைத் திட்டம்: மதிப்பீட்டுத் தேர்வுக்கான அறிவிப்பு- 2026
தமிழ்நாடு அரசு யு.பி.எஸ்.சி முதல்நிலைத் தேர்வுக்கான ஊக்கத்தொகை திட்டத்தின் கீழ், மதிப்பீட்டுத் தேர்வு செப்டம்பர் 6, 2026 அன்று நடைபெறும் என அறிவித்துள்ளது. தேர்வு செய்யப்படும் 1000 மாணவர்களுக்கு 10 மாதங்களுக்கு மாதம் ரூ.7500 வழங்கப்படும். அகில இந்திய குடிமைப் பணிகள் பயிற்சி மையங்களுக்கான சேர்க்கையும் இந்தத் தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் இருக்கும்.
மக்கள்தொகை கணக்கெடுப்பிற்கான இணையவழி சுய கணக்கெடுப்பினைப் பயன்படுத்த மாண்புமிகு முதலமைச்சர் வலியுறுத்தல்
மாநிலத்தின் எதிர்கால வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிப்படையான மக்கள்தொகை கணக்கெடுப்பிற்கான இணையவழி சுய கணக்கெடுப்பு தொடங்கியுள்ளது. மாண்புமிகு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் பொதுமக்கள் அனைவரும் இதில் தவறாமல் பங்கேற்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார். வழங்கப்படும் தகவல்கள் ரகசியமாகப் பாதுகாக்கப்படும் என்றும், மக்கள் நலனுக்காக இந்த கணக்கெடுப்பு மிகவும் முக்கியம் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
தியாகிகள் தினத்தை முன்னிட்டு தியாகி சங்கரலிங்கனார், தியாகி ஆர்யா (என்கிற) பாஷ்யம், தியாகி செண்பகராமன் ஆகிய தியாகிகளின் திருவுருவச் சிலைகளுக்கு மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.
தியாகிகள் தினத்தை முன்னிட்டு சென்னை, கிண்டி, காந்தி மண்டப வளாகத்தில் அமைந்துள்ள தியாகி சங்கரலிங்கனார், தியாகி ஆர்யா (என்கிற) பாஷ்யம், தியாகி செண்பகராமன் ஆகிய தியாகிகளின் திருவுருவச் சிலைகளுக்கு மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.
தியாகிகள் தினத்தை முன்னிட்டு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவு
தியாகிகள் தினத்தை முன்னிட்டு மாண்புமிகு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள், இந்திய விடுதலைக்காகவும், மாநிலத்திற்கு 'தமிழ்நாடு' எனப் பெயர் சூட்டவும் இன்னுயிர் ஈந்த தியாகிகள் ஆர்யா (எ) பாஷ்யம், சங்கரலிங்கனார் மற்றும் செண்பகராமன் ஆகியோருக்கு வீரவணக்கம் செலுத்தினார்.
சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் மாண்புமிகு பொதுப்பணி மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு.ஆதவ் அர்ஜூனா அவர்கள் தலைமையில் இன்று நடைபெற்றது.
சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக்கூட்டம் பொதுப்பணி மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு.ஆதவ் அர்ஜூனா தலைமையில் இன்று நடைபெற்றது. பல்வேறு துறைகளின் அதிகாரிகள் இதில் பங்கேற்றனர்.