பொதுத்துறை
முதலமைச்சர் அலுவலக அறிவிப்புகள், நெறிமுறைகள் மற்றும் முக்கிய நிர்வாக உத்தரவுகள்.
மாண்புமிகு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தவர்களுக்கு நன்றி
மாண்புமிகு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் தனது 52-வது பிறந்தநாளை முன்னிட்டு நேரிலும், தொலைபேசி வாயிலாகவும், சமூக வலைதளங்கள் வாயிலாகவும் வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க தமிழ்நாட்டு விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்க 2600 விடுதி விளையாட்டு வீரர்களின் உணவு, சீருடை மற்றும் விளையாட்டு உபகரணங்களுக்கு ரூ.12.67 கோடி கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது
தமிழ்நாடு அரசு, மாநில விளையாட்டு விடுதிகள் மற்றும் மையங்களில் உள்ள 2600 விளையாட்டு வீரர்களுக்கு தினசரி உணவுப்படி, சீருடை மற்றும் விளையாட்டு உபகரணங்களுக்கான கூடுதல் நிதியாக ரூ.12.67 கோடி ஒதுக்கியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை வட்டம், கன்னிகைபேர் கிராமத்தில் தனியார் மீன் உணவு ஏற்றுமதி தொழிற்சாலையில் அம்மோனியா வாயு கசிவினால் ஏற்பட்ட விபத்து - மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் ஆறுதல் மற்றும் நிதியுதவி அறிவிப்பு
திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை வட்டம், பெரியபாளையம் அருகே கன்னிகைபேர் கிராமத்தில் இன்று (21.06.2026) தனியார் மீன் உணவு ஏற்றுமதி தொழிற்சாலையின் உற்பத்தி பிரிவில் எதிர்பாராதவிதமாக அம்மோனியா வாயு கசிவு ஏற்பட்டதில், அங்கு பணியில் இருந்த 64 நபர்கள் (60 பெண்கள், 4 ஆண்கள்) பாதிக்கப்பட்டனர். இவ்விபத்தில் துரதிஷ்டவசமாக 2 பெண்கள் உயிரிழந்துவிட்டனர்.
மாண்புமிகு இந்தியக் குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு வாழ்த்துத் தெரிவித்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச.ஜோசப் விஜய் அவர்கள் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவு
மாண்புமிகு இந்தியக் குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு அவர்களுக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச.ஜோசப் விஜய் அவர்கள் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு அரசின் நட்புடன் உங்களோடு திட்டத்தில் மனநல ஆலோசனைப் பெற கட்டணமில்லா தொலைபேசி எண் 14416 அல்லது 104 அழைக்கவும்
மாணவர்களின் மன உறுதி மற்றும் மனநலத்தைப் பாதுகாக்க, தமிழ்நாடு அரசின் "நட்புடன் உங்களோடு" திட்டம் மூலம் தொலைபேசி வழியாக மனநல ஆலோசனைகள் தொடர்ந்து வழங்கப்படுகின்றன. நீட் மறுதேர்வு சமயத்தில், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் 14416 அல்லது 104 என்ற கட்டணமில்லா எண்களைத் தொடர்பு கொண்டு பயிற்சி பெற்ற ஆலோசகர்கள் மற்றும் மருத்துவர்களிடமிருந்து ஆலோசனைகளைப் பெறலாம்.
கர்நாடக அரசின் மேகதாது அணை திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றம்
தமிழ்நாடு சட்டமன்றத்தில் கர்நாடக அரசின் மேகதாது அணை கட்டும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, மத்திய அரசு எந்த அனுமதியையும் வழங்கக்கூடாது என வலியுறுத்தி தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
மாண்புமிகு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் திரு. ராகுல் காந்தி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு வாழ்த்துத் தெரிவித்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவு
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள், மாண்புமிகு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் திரு. ராகுல் காந்தி அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
மாண்புமிகு ஒன்றிய வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் அவர்களால் நடத்தப்பட்ட விலை ஆதரவுத் திட்டத்தில் பச்சைப் பயறு மற்றும் கொப்பரை கொள்முதல் தொடர்பான காணொலிக் கூட்டத்தில் மாண்புமிகு தமிழ்நாடு வேளாண்மை - உழவர் நலத்துறை அமைச்சர் திரு. வினோத் அவர்கள் கலந்து கொண்டார்
ஒன்றிய வேளாண்மை அமைச்சர் தலைமையில் நடைபெற்ற விலை ஆதரவுத் திட்டம் குறித்த காணொலிக் கூட்டத்தில் தமிழ்நாடு வேளாண்மை அமைச்சர் திரு.வினோத் அவர்கள் கலந்துகொண்டார், மேலும் ஒன்றிய அரசுக்கு கோரிக்கைகளை விடுத்தார்.
தமிழ்நாடு அரசின் யு.பி.எஸ்.சி முதன்மைத் தேர்வுக்கான ஊக்கத்தொகைத் திட்டம் அறிவிப்பு - 2026
தமிழ்நாடு அரசு 2026-ஆம் ஆண்டு யு.பி.எஸ்.சி முதன்மைத் தேர்வுகளுக்கான ஊக்கத்தொகைத் திட்டத்தை அறிவித்துள்ளது. இத்திட்டத்தின் கீழ், முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்களுக்கு ரூ.25,000 வழங்கப்படும்.
பருவமழை காலத்தில் கொசுக்களால் பரவும் நோய்களை தடுப்பதற்கான வழிகாட்டுதல்கள் வெளியீடு
பருவமழை காலத்தில் கொசுக்களால் பரவும் நோய்களைத் தடுக்கவும், கொசு உற்பத்தி இடங்களை கண்டறிந்து கட்டுப்படுத்தவும் பொது சுகாதாரத்துறை வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. அனைத்து மாவட்ட சுகாதார அதிகாரிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டு, புகார்களுக்கு 48 மணி நேரத்திற்குள் நடவடிக்கை எடுக்கவும், விழிப்புணர்வு ஏற்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பயிற்சிப் பணி விண்ணப்ப அழைப்பு
தமிழ்நாடு பொதுப்பணித் துறையில் ஓராண்டு பயிற்சிப் பணிக்கு பட்டதாரி மற்றும் டிப்ளமோ தகுதியுடையோரிடமிருந்து இணையவழி விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
தூத்துக்குடியில் சுமார் ரூ.38,000 கோடி முதலீட்டில் 15,000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில் அமைக்கப்படவுள்ள அதிநவீன கப்பல் கட்டுமானத் திட்டம் தொடர்பாக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்களுடன் HD KSOE நிறுவனத்தின் உயர்மட்ட அலுவலர்கள் சந்திப்பு
தூத்துக்குடியில் ரூ.38,000 கோடி முதலீட்டில், 15,000 வேலைவாய்ப்புகளை உருவாக்கும் அதிநவீன கப்பல் கட்டுமானத் திட்டம் குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்களுடன் HD KSOE நிறுவன அதிகாரிகள் சந்திப்பு.