#Chief Minister
தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்ட Chief Minister குறிச்சொல் கொண்ட அனைத்து செய்திகள் மற்றும் அறிவிப்புகளை இங்கே காணுங்கள்.
காவிரி - மேகதாது தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் இந்தியப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தின் தமிழாக்கம்
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள், மாண்புமிகு இந்தியப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில், மேகதாது அணை தொடர்பாக ஒன்றிய ஜல் சக்தித் துறை இணை அமைச்சர் மாநிலங்களவையில் அளித்த பதில், கீழ்ப்படுகை மாநிலங்களின் ஒப்புதல் அவசியம் என்பதை உச்சநீதிமன்றத் தீர்ப்பு மற்றும் காவிரி நடுவர் மன்றத் தீர்ப்புகள் வெளிப்படையாகக் குறிப்பிடவில்லை என்று தெரிவித்திருப்பது ஏமாற்றமளிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். மேலும், மேகதாது திட்டத்திற்கு சட்டப்பூர்வ அல்லது நிர்வாக அனுமதி வழங்கப்படக்கூடாது என்றும், கீழ்ப்படுகை மாநிலங்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
விருதுநகர் மாவட்டம், சிவகாசி வட்டம், செங்கமலப்பட்டி பகுதியில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவி - மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் அறிவிப்பு
விருதுநகர் மாவட்டம், சிவகாசி வட்டம், செங்கமலப்பட்டி பகுதியில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு மாண்புமிகு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் ஆறுதல் மற்றும் நிதியுதவி அறிவித்தார்.
காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் பளுதூக்கும் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற திரு. ராஜா முத்துப்பாண்டி அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவு.
மாண்புமிகு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள், ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடைபெற்ற 23-வது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில், ஆண்களுக்கான 65 கிலோ பளுதூக்கும் எடைப் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற திரு. ராஜா முத்துப்பாண்டி அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து, தமிழ்நாடு அரசின் சார்பில் 30 இலட்சம் ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படும் என அறிவித்தார்.
பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் மருத்துவர் ச. இராமதாசு அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு வாழ்த்துத் தெரிவித்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச. ஜோசப் விஜய் அவர்கள் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவு
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச. ஜோசப் விஜய் அவர்கள், பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் மருத்துவர் ச. இராமதாசு அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து, நல்ல உடல்நலத்துடனும், நீண்ட ஆயுளுடனும் வாழ வாழ்த்தியுள்ளார்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள், திரு. மல்லிகார்ஜுன் கார்கே அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்து
தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள், இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவரும், மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவருமான திரு. மல்லிகார்ஜுன் கார்கே அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் சேத்துப்பட்டு உயிரி-எரிவாயு ஆலையை பார்வையிட்டு, பெருநகர சென்னை மாநகராட்சியில் அறிவியல் பூர்வமான கழிவு மேலாண்மைக்கு உத்தரவுகள் பிறப்பித்தார்
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் சென்னை சேத்துப்பட்டில் பொது-தனியார் பங்களிப்புடன் செயல்பட்டு வரும் உயிரி-எரிவாயு ஆலையை நேரில் பார்வையிட்டார். தினமும் உருவாகும் 6,150 மெட்ரிக் டன் குப்பைகளை தரம் பிரித்து, மக்கும் குப்பைகளை எரிவாயு மற்றும் உரமாக மாற்றவும், மக்காத குப்பைகளை சாலை அமைக்கவும், சிமெண்ட் ஆலைகளுக்கு எரிபொருளாகவும் பயன்படுத்த பெருநகர சென்னை மாநகராட்சி அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். மேலும், தமிழ்நாட்டிலுள்ள அனைத்து நகர்ப்புற உள்ளாட்சிகளிலும் கழிவு மேலாண்மையை அறிவியல் பூர்வமாக காலக்கெடுவுடன் செயல்படுத்தவும் அறிவுறுத்தினார்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்களுடன் ஃபோர்டு நிறுவனத்தின் உயர்மட்டக் குழுவினர் சந்திப்பு
ஃபோர்டு நிறுவனத்தின் உயர்மட்டக் குழுவினர், தமிழ்நாட்டில் தனது உற்பத்தித் திட்டத்தை மீண்டும் தொடங்குவது, உலகளாவிய திறன் மையங்களை விரிவாக்கம் செய்வது மற்றும் எதிர்கால விரிவாக்கத் திட்டங்கள் குறித்து முதலமைச்சருடன் ஆலோசனை நடத்தினர். ஃபோர்டு நிறுவனத்திற்கும் தமிழ்நாட்டிற்கும் இடையேயான 30 வருட உறவை நினைவுகூர்ந்த முதலமைச்சர், மறைமலைநகர் உற்பத்திச் சாலையை முழுமையாகப் பயன்படுத்தி, உற்பத்தியையும் விரிவாக்கத் திட்டங்களையும் மேற்கொள்ளக் கேட்டுக் கொண்டார்.
உலக சதுரங்க நாளை முன்னிட்டு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவு
உலக சதுரங்க நாளை முன்னிட்டு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழ்நாடு அதிக இளம் கிராண்ட் மாஸ்டர்களை உருவாக்கியதில் சாதனை படைத்துள்ளது என்றும், இளம் தலைமுறையினருக்கு அரசு அனைத்து உதவிகளையும் வழங்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
தேசிய திரைப்பட விருதுகளை வென்றுள்ள தமிழ்த் திரையுலக கலைஞர்களுக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் வாழ்த்து
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் பல்வேறு பிரிவுகளில் 10 தேசிய திரைப்பட விருதுகளை வென்று சாதனை படைத்துள்ள தமிழ்த் திரையுலகக் கலைஞர்களுக்கு தனது பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு நாளை முன்னிட்டு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவு
தமிழரின் தொன்மை, வரலாறு, பண்பாடு, மொழியுணர்வைப் போற்றும் வகையில் நமது மாநிலத்திற்கு 'தமிழ்நாடு' எனப் பெயர் சூட்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்ட இந்நாளில், தமிழ் மக்கள் அனைவருக்கும் மனமார்ந்த 'தமிழ்நாடு நாள்' நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மக்கள்தொகை கணக்கெடுப்பிற்கான இணையவழி சுய கணக்கெடுப்பினைப் பயன்படுத்த மாண்புமிகு முதலமைச்சர் வலியுறுத்தல்
மாநிலத்தின் எதிர்கால வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிப்படையான மக்கள்தொகை கணக்கெடுப்பிற்கான இணையவழி சுய கணக்கெடுப்பு தொடங்கியுள்ளது. மாண்புமிகு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் பொதுமக்கள் அனைவரும் இதில் தவறாமல் பங்கேற்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார். வழங்கப்படும் தகவல்கள் ரகசியமாகப் பாதுகாக்கப்படும் என்றும், மக்கள் நலனுக்காக இந்த கணக்கெடுப்பு மிகவும் முக்கியம் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
தியாகிகள் தினத்தை முன்னிட்டு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவு
தியாகிகள் தினத்தை முன்னிட்டு மாண்புமிகு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள், இந்திய விடுதலைக்காகவும், மாநிலத்திற்கு 'தமிழ்நாடு' எனப் பெயர் சூட்டவும் இன்னுயிர் ஈந்த தியாகிகள் ஆர்யா (எ) பாஷ்யம், சங்கரலிங்கனார் மற்றும் செண்பகராமன் ஆகியோருக்கு வீரவணக்கம் செலுத்தினார்.