#Chief Minister
தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்ட Chief Minister குறிச்சொல் கொண்ட அனைத்து செய்திகள் மற்றும் அறிவிப்புகளை இங்கே காணுங்கள்.
ஜப்பானில் நடைபெற்றுவரும் 5-வது பாரா ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பேட்மிண்டன் விளையாட்டில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த வீராங்கனை மனிஷா ராமதாஸ் அவர்களுக்கு வாழ்த்துத் தெரிவித்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவு
ஜப்பானில் நடைபெற்றுவரும் 5-வது பாரா ஆசிய விளையாட்டுப் போட்டிகளில், பேட்மிண்டன் விளையாட்டில், பெண்கள் ஒற்றையர் SU5 பிரிவில், வெண்கலப் பதக்கம் வென்று தமிழ்நாட்டிற்கும், இந்தியாவிற்கும் பெருமை சேர்த்துள்ள வீராங்கனை மனிஷா ராமதாஸ் அவர்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுகளையும், நல்வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
பின்னணிப் பாடகர் திரு. கிருஷ்ணராஜ் அவர்களின் மறைவுக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் இரங்கல் தெரிவிப்பு
தமிழ்த் திரையுலகின் பிரபல பின்னணிப் பாடகர் திரு. கிருஷ்ணராஜ் அவர்களின் மறைவுச் செய்தி கேட்டு அதிர்ச்சியும், மனவேதனையும் அடைந்ததாக தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் தெரிவித்துள்ளார். இது தமிழ்த் திரையுலகிற்குப் பேரிழப்பு என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஒன்றிய அமைச்சர் அமித் ஷா அவர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் பிறந்தநாள் வாழ்த்து
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள், மாண்புமிகு ஒன்றிய உள்துறை மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சர் திரு. அமித் ஷா அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து, நல்ல உடல்நலத்துடனும், நீண்ட ஆயுளுடனும் நாட்டுக்கு சேவை செய்ய வாழ்த்தினார்.
வேலூர் மாவட்டம், அணைக்கட்டு கிராமத்தில் இயங்கிவந்த தனியார் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் உயிரிழந்தவர் மற்றும் காயமடைந்தவரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவி
வேலூர் மாவட்டம், அணைக்கட்டு கிராமத்தில் தனியார் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் உயிரிழந்தவர் மற்றும் காயமடைந்தவரின் குடும்பத்தினருக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் ஆறுதல் மற்றும் நிதியுதவி அறிவித்துள்ளார்.
பாரா ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் வெண்கலப் பதக்கம் வென்ற நித்ய ஸ்ரீக்கு முதலமைச்சர் வாழ்த்து, ரூ. 30 இலட்சம் ஊக்கத்தொகை அறிவிப்பு
ஜப்பானில் நடைபெற்ற 5-வது பாரா ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பேட்மிண்டன் கலப்பு இரட்டையர் (SH6 பிரிவு) பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த வீராங்கனை நித்ய ஸ்ரீக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் வாழ்த்து தெரிவித்ததுடன், தமிழ்நாடு அரசின் சார்பில் ரூ. 30 இலட்சம் உயரிய ஊக்கத்தொகை வழங்கப்படும் என அறிவித்தார்.
பாரா ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் வெண்கலம் வென்ற வீராங்கனை மனிஷா ராமதாஸ்க்கு முதலமைச்சர் வாழ்த்து மற்றும் ரூ. 30 இலட்சம் ஊக்கத்தொகை அறிவிப்பு
ஜப்பானில் நடைபெற்றுவரும் 5-வது பாரா ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பேட்மிண்டன் கலப்பு இரட்டையர் SL3-SU5 பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய அணிக்கும், அதில் இடம்பெற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த வீராங்கனை மனிஷா ராமதாஸ் அவர்களுக்கும் மாண்புமிகு முதலமைச்சர் திரு. ச.ஜோசப் விஜய் அவர்கள் நெஞ்சார்ந்த பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்து, வீராங்கனை மனிஷா ராமதாஸ்க்கு ரூ. 30 இலட்சம் உயரிய ஊக்கத்தொகை வழங்கப்படும் என அறிவித்தார்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் மழைநீர் சேமிப்பு விழிப்புணர்வு குறித்த "துளி" இலச்சினையைத் திறந்து வைத்து, மழைநீர் சேமிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார்
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் இன்று (21.10.2026) நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில், சென்னை, சேப்பாக்கம், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மழைநீர் சேமிப்பு விழிப்புணர்வு குறித்த "துளி" இலச்சினையைத் திறந்து வைத்து, அங்கு அமைக்கப்பட்டுள்ள மழைநீர் சேகரிப்பு மாதிரி இல்லத்தைப் பார்வையிட்டார். பின்னர், மெரினா கடற்கரையில், தமிழ்நாட்டிலுள்ள அனைத்து மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சிகளில் உள்ள பகுதிகளில் மழைநீர் சேமிப்பு குறித்த விழிப்புணர்வைப் பொதுமக்களிடையே ஏற்படுத்திடும் வகையில் மழைநீர் சேமிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்து, குறும்படத்தைப் பார்வையிட்டார்.
மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் பாரா ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் வெள்ளிப் பதக்கம் வென்ற வீரர் சிவராஜன் சோலைமலை அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து ரூ.50 இலட்சம் ஊக்கத்தொகை அறிவிப்பு
ஜப்பானில் நடைபெற்ற 5-வது பாரா ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பேட்மிண்டன் ஆண்கள் இரட்டையர் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரர் சிவராஜன் சோலைமலை அவர்களுக்கு மாண்புமிகு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் வாழ்த்து தெரிவித்து, தமிழ்நாடு அரசு சார்பில் ரூ.50 இலட்சம் ஊக்கத்தொகை வழங்கப்படும் என அறிவித்தார்.
மாநிலத்திலுள்ள அனைத்து காவல் நிலையங்களுக்கான அன்றாட சில்லறை செலவினத்தை உயர்த்தி ரூ.71 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியீடு
தமிழ்நாடு அரசு, இலஞ்ச லாவண்யமற்ற அரசு அலுவலகங்களை உருவாக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, மாநிலத்திலுள்ள அனைத்து காவல் நிலையங்களுக்கும் அன்றாட சில்லறை செலவினங்களை உயர்த்துவதற்காக ரூ.71 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பை மாண்புமிகு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் வெளியிட்டார்.
ஜப்பானில் நடைபெற்றுவரும் 5-வது பாரா ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பெண்களுக்கான வலுதூக்குதல் போட்டியில், 67 கிலோ எடைப் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற தமிழக வீராங்கனை கஸ்தூரி ராஜாமணி அவர்களுக்கு வாழ்த்துத் தெரிவித்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவு
ஜப்பானில் நடைபெற்றுவரும் 5-வது பாரா ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பெண்களுக்கான வலுதூக்குதல் போட்டியில், 67 கிலோ எடைப் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்று தமிழ்நாட்டிற்கும், இந்தியாவிற்கும் பெருமை சேர்த்துள்ள வீராங்கனை கஸ்தூரி ராஜாமணி அவர்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுகளையும், நல்வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது சாதனையைப் பாராட்டும் வகையில், தமிழ்நாடு அரசு சார்பில் ரூ.50 இலட்சம் உயரிய ஊக்கத்தொகை வழங்கப்படும்.
காவலர் வீரவணக்க நாளை முன்னிட்டு, காவலர் நினைவுச் சின்னம் முன்பாக மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தி, பணியின்போது உயிரிழந்த காவலர்களின் குடும்பங்களுக்கு ரூ.5.96 கோடி காப்பீட்டுத் தொகைக்கான ஆணைகளை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச.ஜோசப் விஜய் அவர்கள் வழங்கினார்.
காவலர் வீரவணக்க நாளை முன்னிட்டு, தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச.ஜோசப் விஜய் அவர்கள், பணியின்போது உயிரிழந்த அல்லது கோமா நிலையிலுள்ள 7 காவலர்களின் குடும்பங்களுக்கு ரூ.5.96 கோடி காப்பீட்டுத் தொகைக்கான ஆணைகளை வழங்கினார். மேலும், அவர் சென்னையில் காவலர் நினைவுச் சின்னத்தில் மரியாதை செலுத்தி, மரக்கன்றை நட்டு வைத்தார்.
காவலர் வீரவணக்க நாளை முன்னிட்டு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச.ஜோசப் விஜய் அவர்கள் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவு
காவலர் வீரவணக்க நாளில், முதலமைச்சர் உயிர் தியாகம் செய்த காவலர்களுக்கு அஞ்சலி செலுத்துகிறார் மற்றும் அமைதி, சட்டம் ஒழுங்கு பேணுவதில் அவர்களின் அர்ப்பணிப்பை, பல்வேறு சவால்களை எதிர்கொண்டு பாராட்டிப் பேசுகிறார்.