செய்தி வெளியீடு எண்: 409 - சென்னை வடக்கு மண்டலத்திற்குட்பட்ட 608 பயனாளிகளுக்கு புதிய மின்னணு குடும்ப அட்டைகள் மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு. ப.வெங்கடரமணன் அவர்கள் வழங்கினார்.
உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு. ப.வெங்கடரமணன், சென்னை வடக்கு மண்டலத்திற்குட்பட்ட 608 பயனாளிகளுக்கு புதிய மின்னணு குடும்ப அட்டைகளை வழங்கினார். மேலும், அத்தியாவசியப் பொருட்களின் வெளிப்படைத்தன்மை மற்றும் நலத்திட்டங்கள் மக்களைச் சென்றடைவதை வலியுறுத்தினார்.
விரிவான சுருக்கம்
இன்று (15.07.2026) சென்னை, கண்ணதாசன் நகர், கொடுங்கையூரில் உள்ள எஸ்.கே. மஹாலில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு. ப.வெங்கடரமணன் அவர்கள் பெரம்பூர் பகுதிக்குட்பட்ட 300 பயனாளிகளுக்கு புதிய மின்னணு குடும்ப அட்டைகளை வழங்கினார். அதனைத் தொடர்ந்து, தண்டையார்பேட்டை, பெருநகர சென்னை மாநகராட்சி நெய்தல் திருமண மாளிகைகளில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆர்.கே.நகர், இராயபுரம் மற்றும் திருவெற்றியூர் பகுதிகளுக்குட்பட்ட 308 பயனாளிகளுக்கு புதிய மின்னணு குடும்ப அட்டைகளை வழங்கி, அரசின் மக்கள் நலத் திட்டங்கள் அனைவரையும் விரைவாகச் சென்றடைய வேண்டும் என்ற அரசின் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தினார். இந்நிகழ்ச்சியில் மாண்புமிகு அமைச்சர் அவர்கள் பேசுகையில், பொதுமக்கள் நியாய விலைக் கடைகள் மூலம் வழங்கப்படும் அரிசி, சர்க்கரை, பருப்பு, பாமாயில் உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களின் முக்கியத்துவத்தை உணர்ந்து, தங்களுக்குத் தேவையான பொருட்களை முறையாகப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தினார். மேலும், விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்யப்பட்டு, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் நவீன அரிசி ஆலை மற்றும் தனியார் அரிசி அரவை ஆலையிலிருந்து அரிசியாக பெறப்படுகிறது. மேலும், சர்க்கரை, பருப்பு, பாமாயில் உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்கள் வியாபாரிகளிடமிருந்து வெளிச்சந்தை விலையில் பெறப்பட்டு, தரப் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு, விலையில்லா மற்றும் மானிய விலையில் பொதுமக்களுக்கு வழங்கப்படுகின்றன என்பதையும் விளக்கமாக எடுத்துரைத்தார். மேலும், நியாய விலைக் கடைகளில் பொருட்களை வாங்கும் ஒவ்வொரு முறையும் கட்டாயமாக ரசீது பெற்றுக் கொள்ள வேண்டும் என்றும், இதன் மூலம் விநியோகத்தில் வெளிப்படைத்தன்மை உறுதி செய்யப்படுவதுடன், பொதுமக்களுக்கு வழங்கப்படும் உணவுப் பொருட்கள் வெளிச்சந்தைக்கு முறைகேடாக விற்கப்படுவதைப் பொதுமக்களின் பங்களிப்புடன் திறம்பட தடுக்க முடியும் என்றும் மாண்புமிகு அமைச்சர் அவர்கள் தெரிவித்தார்.
முக்கிய அறிவிப்புகள்
- 1சென்னை வடக்கு மண்டலத்திற்குட்பட்ட 608 பயனாளிகளுக்கு புதிய மின்னணு குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டன.
- 2அரசின் மக்கள் நலத் திட்டங்கள் அனைவரையும் விரைவாகச் சென்றடைய வேண்டும் என்ற உறுதிப்பாடு.
- 3நியாய விலைக் கடைகள் மூலம் வழங்கப்படும் அத்தியாவசியப் பொருட்களின் முக்கியத்துவத்தை உணர்ந்து, தேவையான பொருட்களை முறையாகப் பெற்றுக் கொள்ள பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்.
- 4விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்யப்பட்டு, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் நவீன அரிசி ஆலை மற்றும் தனியார் அரிசி அரவை ஆலையிலிருந்து அரிசியாக பெறப்படுகிறது.
- 5சர்க்கரை, பருப்பு, பாமாயில் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் வியாபாரிகளிடமிருந்து வெளிச்சந்தை விலையில் பெறப்பட்டு, தரப் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு, விலையில்லா மற்றும் மானிய விலையில் வழங்கப்படுகின்றன.
- 6நியாய விலைக் கடைகளில் பொருட்களை வாங்கும் ஒவ்வொரு முறையும் கட்டாயமாக ரசீது பெற்றுக் கொள்ள வேண்டும்.
- 7பொதுமக்களின் பங்களிப்புடன் அத்தியாவசியப் பொருட்கள் வெளிச்சந்தைக்கு முறைகேடாக விற்கப்படுவதைத் தடுத்தல்.