வேளாண்மை மற்றும் பாசனம்
விவசாய செய்திகள், பருவமழை அறிவுரைகள், மேட்டூர் அணை நீர்மட்டம், பயிர் காப்பீடு, மானியங்கள் மற்றும் நீர்வள மேலாண்மை.
சென்னை, கலைவாணர் அரங்கில் 11 மாவட்டங்களுக்கான 'வெற்றித் தமிழகம்' தொலைநோக்கு ஆவணம் மற்றும் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடுகள் குறித்த 'முதல் மண்டல மாநாடு' நடைபெற்றது
மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி, மாண்புமிகு அமைச்சர் திரு.N.ஆனந்த் தலைமையில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பில் சென்னை, கலைவாணர் அரங்கில் 11 மாவட்டங்களுக்கான 'வெற்றித் தமிழகம் - தொலைநோக்கு ஆவணம் - செயல்திட்ட முன்னெடுப்பு' மற்றும் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடுகள் குறித்து 'முதல் மண்டல மாநாடு' நடைபெற்றது.
மாண்புமிகு வேளாண்மை-உழவர் நலத்துறை அமைச்சர் திரு.ர.வினோத் அவர்கள் தலைமையில் தனியார் சர்க்கரை ஆலைகளின் செயல்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம்
மாண்புமிகு வேளாண்மை-உழவர் நலத்துறை அமைச்சர் திரு.ர.வினோத் அவர்கள் தலைமையில், தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் தனியார் சர்க்கரை ஆலைகளின் செயல்பாடுகள் மற்றும் முக்கிய பிரச்சனைகள் குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தனியார் சர்க்கரை ஆலைகளின் செயல்பாடுகள், கரும்பு விவசாயிகளின் நலன் மற்றும் சர்க்கரைத் தொழிலின் எதிர்கால வளர்ச்சி குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.
தமிழ்நாடு அரசு 2025-26 அரவைப் பருவத்திற்கு கரும்பு விவசாயிகளுக்கு டன் ஒன்றிற்கு ரூ.709.50 சிறப்பு ஊக்கத்தொகை அறிவிப்பு
தமிழ்நாடு அரசு, 2025-2026 ஆம் ஆண்டு அரவைப் பருவத்திற்கு சர்க்கரை ஆலைகளுக்கு கரும்பு வழங்கிய விவசாயிகளுக்கு டன் ஒன்றிற்கு ரூ.709.50 சிறப்பு ஊக்கத்தொகையாக ரூ.603.34 கோடி வழங்கி அரசாணை வெளியிட்டுள்ளது. இதன் மூலம் டன் ஒன்றிற்கு ரூ.4,000 விலை உறுதி செய்யப்பட்டுள்ளது.
பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவு
பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் நினைவு நாளில், கல்வி, தொழில் மற்றும் வேளாண் வளர்ச்சிக்கு அவர் ஆற்றிய பங்களிப்புகளை நினைவு கூர்ந்து முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் புகழாரம் சூட்டினார்.
கொள்முதல் நிலையங்களில் குறைபாடுகள் இருப்பின் Whatsapp எண் மூலம் புகார் அளிக்கலாம்
நடப்பு கொள்முதல் பருவம் 2026-2027-ற்கு ஒன்றிய அரசால் நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம் செய்யப்பட்டதன் அடிப்படையில், தமிழக விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் சட்டமன்ற பேரவை விதி 110-ன் கீழ் நெல்லுக்கான ஊக்கத் தொகையாக சன்னரக நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.156/-லிருந்து ரூ.289/-ஆகவும், பொதுரக நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.131/-லிருந்து ரூ.159/- ஆகவும் உயர்த்தி வழங்க அறிவிப்பு வெளியிடப்பட்டது. மேலும், கொள்முதல் நிலையங்களில் குறைபாடுகள் அல்லது பணம் வசூலிப்பது குறித்து புகார் தெரிவிக்க வாட்ஸ்அப் எண் 9500801465 அறிவிக்கப்பட்டுள்ளது.
பழங்குடியின விவசாயிகளுக்கு இயற்கை மற்றும் அங்கக வேளாண்மை சான்றிதழ் வழங்க விருப்பக் கோரிக்கை
தமிழ்நாடு பழங்குடியினர் நல இயக்குநரகம், பழங்குடியின விவசாயிகள் மற்றும் குழுக்களுக்கு இயற்கை மற்றும் அங்கக வேளாண்மை சான்றிதழ் சேவைகளை வழங்க தகுதியான நிறுவனங்களிடமிருந்து விருப்பக் கோரிக்கைகளை (EoI) வரவேற்கிறது.
கே.எம்.எஸ் 2026-2027 பருவத்திற்கு சன்ன ரக நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2750, பொது ரக நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2600 என்ற உயர்த்தப்பட்ட விலையில் நெல் கொள்முதல்
நடப்பு கே.எம்.எஸ் 2026-2027-ம் பருவத்தில் சன்ன ரக நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2750/-, பொது ரக நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2600/- என்ற உயர்த்தப்பட்ட விலையில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலமாக தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் இது வரை 42,082 மெ.டன் நெல் கொள்முதல் செய்துள்ளது. ஒன்றிய அரசின் குறைந்தபட்ச ஆதார விலையுடன், மாநில அரசின் ஊக்கத் தொகையுடன் சேர்த்து இந்த விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விவசாயிகளின் நலன் கருதி விடுமுறை நாட்களிலும் கொள்முதல் நிலையங்கள் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மேட்டூர் அணையிலிருந்து குடிநீர்த் தேவை மற்றும் 2026-27 ஆம் ஆண்டிற்கான காவிரி டெல்டா பாசனத்திற்காக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் தண்ணீர் திறந்து வைத்தார்
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் இன்று (01.09.2026) சேலம் மாவட்டம், மேட்டூர் அணையிலிருந்து, தமிழ்நாட்டின் நெற்களஞ்சியமாகத் திகழும் காவிரி டெல்டா மாவட்டங்களில் சம்பா சாகுபடியை மேற்கொள்ளவும், காவிரிப் படுகைப் பகுதிகளின் குடிநீர்த் தேவைகளை நிறைவு செய்யவும் தண்ணீரைத் திறந்து வைத்தார்.
உயிர்ம வேளாண்மையில் சிறப்பாகச் செயல்படும் மூன்று உழவர்களுக்கு 2025-2026ஆம் ஆண்டிற்கான சிறந்த உயிர்ம உழவர்க்கான நம்மாழ்வார் விருது மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச. ஜோசப் விஜய் அவர்கள் வழங்கினார்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் இன்று (27.8.2026) தலைமைச் செயலகத்தில், வேளாண்மை - உழவர் நலத்துறை சார்பில் 2025-2026ஆம் ஆண்டிற்கான சிறந்த உயிர்ம உழவர்க்கான நம்மாழ்வார் விருதுகளை திரு.செ.நல்லசிவம், திரு.அ. சுப்பிரமணியன் மற்றும் திருமதி சாதனா ஆகியோருக்கு வழங்கிச் சிறப்பித்தார்.
மேட்டூர் அணையிலிருந்து நீர் திறந்து விடுவது குறித்து மாண்புமிகு ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத் துறை அமைச்சர் திரு. என். ஆனந்த் அவர்களின் அறிக்கை.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்களின் உத்தரவிற்கிணங்க, மேட்டூர் அணையிலிருந்து 01.09.2026 முதல் 45 நாட்களுக்கு டெல்டா பாசனத்திற்காக நீர் திறந்துவிட தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது.
மோர்தானா அணையிலிருந்து பாசனத்திற்காக நீர் திறப்பு
வேலூர் மாவட்டம் மற்றும் குடியாத்தம் வட்டத்திலுள்ள 8366.70 ஏக்கர் நிலங்களுக்கு பாசன வசதி பெறும் வகையில், மோர்தானா அணையிலிருந்து 24.08.2026 முதல் 01.09.2026 வரை 9 நாட்களுக்கு மொத்தம் 174.96 மில்லியன் கனஅடிக்கு தண்ணீர் திறக்க தமிழ்நாடு அரசு ஆணையிட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு விவசாயிகளுக்கு கூடுதல் பயிர்க்கடன் தள்ளுபடி அறிவிப்பு
தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள், சட்டமன்றப் பேரவையில் விதி 110-ன் கீழ், விவசாயப் பெருமக்களின் நலனிற்காக கூட்டுறவு வங்கிகள் மூலம் விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட பயிர்க்கடன்களுக்குக் கூடுதல் தள்ளுபடி அறிவிப்பை வெளியிட்டார்.