#Chennai
தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்ட Chennai குறிச்சொல் கொண்ட அனைத்து செய்திகள் மற்றும் அறிவிப்புகளை இங்கே காணுங்கள்.
பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் வடகிழக்குப் பருவமழையினை முன்னிட்டு மண்டல அளவிலான கண்காணிப்பு அலுவலர்கள், வட்டார துணை ஆணையர்கள், மண்டல அலுவலர்கள், ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையம் ஆகியவற்றில் பொதுமக்கள்தொடர்பு கொண்டு தங்களது புகார்களைத் தெரிவிக்கலாம்.
பெருநகர சென்னை மாநகராட்சி வடகிழக்குப் பருவமழை மற்றும் சூப்பர் எல்நினோவினை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விவரிக்கிறது. தலைமைச் செயலாளர் ஆய்வுக்கூட்டம், நிவாரண மையங்கள், சமையல் கூடங்கள் தயார்நிலை மற்றும் அலுவலர்கள், உபகரணங்கள் தயார்நிலை குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது. பொதுமக்கள் புகார்களை தெரிவிக்க தொடர்பு எண்களும் வழங்கப்பட்டுள்ளன.
ஆயுத பூஜையை முன்னிட்டு பொது மக்கள் தங்களின் சொந்த ஊர்களுக்கு செல்வதற்கு வசதியாக, போக்குவரத்துத் துறையின் சார்பில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு, சிறப்புப் பேருந்துகள் இயக்கப் பணிகளை மேற்கொள்ள மேலாண் இயக்குநர்கள், பொது மேலாளர்கள் மற்றும் பல்வேறு நிலை அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் நியமித்து கண்காணிப்பு.
ஆயுத பூஜை பண்டிகையை முன்னிட்டு, பொது மக்கள் தங்களின் சொந்த ஊர்களுக்கு செல்வதற்கு வசதியாக, போக்குவரத்துத் துறையின் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கம் மற்றும் சிறப்புப் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. சென்னையிலிருந்து 15/10/2026 முதல் 18/10/2026 வரையில், 14,963 பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. பேருந்து நிலையங்களில் கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டு சீரான பேருந்து இயக்கம் உறுதி செய்யப்படுகிறது.
வேளாண்மை - உழவர் நலத்துறை சார்பில் மகளிர் விவசாயிகள் தின கொண்டாட்டம்
சர்வதேச பெண் விவசாயிகள் ஆண்டின் ஒரு பகுதியாக, மகளிர் விவசாயிகளின் பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில், மாண்புமிகு வேளாண்மை-உழவர் நலத்துறை அமைச்சர் திரு. ர.வினோத் தலைமையில் அக்டோபர் 15, 2026 அன்று சென்னை வேளாண்மை இயக்குநரகத்தில் மகளிர் விவசாயிகள் தினம் கொண்டாடப்பட்டது.
முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு, மாண்புமிகு சட்டப்பேரவைத் தலைவர் மற்றும் மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள், அன்னாரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினார்கள்.
தமிழ்நாடு அரசின் சார்பில், முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்களின் 96-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, மாண்புமிகு சட்டப்பேரவைத் தலைவர் திரு.ஜே.சி.டி. பிரபாகர், மாண்புமிகு உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு. ப.வெங்கடரமணன், மாண்புமிகு பள்ளிக்கல்வி, தமிழ் வளர்ச்சி, செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் திரு. ராஜ்மோகன், மாண்புமிகு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு. ஜா.முகமது பர்வேஸ் ஆகியோர் இன்று (15.10.2026) சென்னை, அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்துள்ள முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்களின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்தும், அவர்களது திருவுருவப்படத்திற்கு மலர் தூவியும் மரியாதை செலுத்தினார்கள்.
தரநிலைகள் மூலம் மலிவு விலை மற்றும் தூய்மையான எரிசக்தியை உறுதிப்படுத்துவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்திய BIS-ன் தரநிலைத் திருவிழா – 2026
மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு. ப. வெங்கடரமணன் அவர்கள் உலக தரநிலைகள் தினத்தை முன்னிட்டு (14.10.2026) சென்னை கிண்டியில் நடைபெற்ற "தரநிலைத் திருவிழா 2026" நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். "நீடித்த வளர்ச்சி இலக்குகளுக்கான தரநிலைகள் - இலக்கு 7: மலிவு விலை மற்றும் தூய்மையான எரிசக்தி" என்ற கருப்பொருளின் கீழ் நடைபெற்ற இவ்விழாவில், தூய்மையான எரிசக்தித் தொழில்நுட்பங்களை மேம்படுத்துதல், எரிசக்தித் திறனை அதிகரித்தல் மற்றும் நிலையான வளர்ச்சியை முன்னெடுத்தல் ஆகியவற்றில் தரநிலைகளின் முக்கியப் பங்கு எடுத்துரைக்கப்பட்டது. அன்றாட வாழ்க்கையில் தரம், பாதுகாப்பு மற்றும் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்துவதிலும், மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதிலும், பொது நலன் மற்றும் வளர்ச்சித் தேவைகளை நிறைவேற்றுவதிலும் தரநிலைகள் முக்கியப் பங்காற்றுவதாகக் கூறி, BIS-இன் பங்கினை அமைச்சர் பாராட்டினார்.
வருவாய் பெருக்கக் குழு கூட்டம் நடைபெற்றது
திரு. மான்டேக் சிங் அலுவாலியா தலைமையில் இயங்கும் வருவாய் பெருக்கக் குழு, மாநிலத்தின் சொந்த வரி மற்றும் வரியல்லாத வருவாயைப் பெருக்குவதற்கான நடவடிக்கைகளைப் பரிந்துரைக்க, தனது 5வது கூட்டத்தை 14.10.2026 அன்று சென்னையில் நடத்தியது.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் ஒக்கியம் மடுவுவை நேரில் பார்வையிட்டு, தென் சென்னை வெள்ளத்தடுப்பு முன்னேற்பாட்டுப் பணிகளை ஆய்வு செய்தார்
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் இன்று (14.10.2026) சென்னை மாவட்டம், சோழிங்கநல்லூர் வட்டம், காரப்பாக்கத்தில் உள்ள ஒக்கியம் மடுவுவை நேரில் பார்வையிட்டு, வடகிழக்குப் பருவமழையை முன்னிட்டு பள்ளிக்கரணை சதுப்பு நிலம் மற்றும் தெற்கு பக்கிங்ஹாம் கால்வாய் பகுதிகளில் நீர்வளத் துறையால் மேற்கொள்ளப்பட்டுவரும் வெள்ளத் தடுப்பு முன்னேற்பாட்டுப் பணிகளை ஆய்வு செய்தார்.
சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் வாயிலாக ரூ.3,108.55 கோடி மதிப்பீட்டில், பெருநகர சென்னை மாநகராட்சியின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சுற்றுக்குழாய் அமைக்கும் திட்டப் பணிகளுக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் அடிக்கல் நாட்டினார்.
மாண்புமிகு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள், ஆசிய வளர்ச்சி வங்கியின் நிதியுதவியுடன் ரூ.3,108.55 கோடி மதிப்பீட்டில் சென்னைப் பெருநகர் சுற்றுக்குழாய் அமைக்கும் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டினார். இத்திட்டம் 9 நீர் சுத்திகரிப்பு மற்றும் கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையங்களை ஒருங்கிணைத்து, சென்னை முழுவதும் தடையற்ற மற்றும் தரமான குடிநீர் விநியோகத்தை உறுதி செய்யும்.
மாண்புமிகு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு. ஜா. முகமது பர்வேஸ் அவர்கள் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு. ஜா. முகமது பர்வேஸ், சென்னை, செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களைச் சேர்ந்த 100 அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு ரூ.42.21 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை சென்னையில் நடைபெற்ற விழாவில் வழங்கினார்.
தலைமைச் செயலகத்தின் முதல் தளத்தில் ஏற்பட்ட மின்தடை உடனடியாக சீரமைப்பு
சென்னை தலைமைச் செயலகத்தின் பிரதான கட்டடத்தின் முதல் தளத்தில் இன்று (12.10.2026) காலை மின் விநியோகத்தில் தற்காலிகத் தடை ஏற்பட்டது. பொதுப்பணித் துறை அலுவலர்கள் உடனடியாக ஆய்வு மேற்கொண்டு, பழுதை சரிசெய்து, காலை 11.25 மணியளவில் மின் விநியோகம் முழுமையாக மீட்டெடுக்கப்பட்டது.
சென்னை மெட்ரோ இரயில் திட்டம் கட்டம் -II, வழித்தடம் 4-ன் முதற்பகுதி மற்றும் 11 உயர்மட்ட மெட்ரோ இரயில் நிலையங்கள் பொதுமக்கள் பயன்பாட்டிற்காகத் தொடக்கம்
மாண்புமிகு இந்தியப் பிரதமர், மாண்புமிகு தமிழ்நாடு ஆளுநர் மற்றும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஆகியோர் முன்னிலையில் சென்னை மெட்ரோ இரயில் திட்டம் கட்டம் -II, வழித்தடம் 4-ன் முதற்பகுதியான 14.64 கி.மீ நீளத்திலான உயர்மட்ட வழித்தடத்தில் மெட்ரோ இரயில் சேவை மற்றும் 11 உயர்மட்ட மெட்ரோ இரயில் நிலையங்களைத் தொடங்கி வைத்தனர்.
தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் ஒரு நாள் முருங்கை மதிப்பு கூட்டப்பட்ட பயிற்சி
சென்னை, தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் (EDII), அக்டோபர் 16, 2026 அன்று அதன் சென்னை வளாகத்தில் முருங்கை மதிப்பு கூட்டப்பட்ட பயிற்சி குறித்த ஒரு நாள் பட்டறையை ஏற்பாடு செய்துள்ளது. இந்த பட்டறை முருங்கை பொருட்களைப் பயன்படுத்தி ஒரு தொழிலைத் தொடங்குவதற்கான திறன்களை பங்கேற்பாளர்களுக்கு வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.